பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4446 கம்பன் கலை நிலை அடுதிறல் புரியவே இளையவன்மூண்டு கடுத்து முனைந்து போரா டிஞன். விக்குரிசிலின்வெற்றிப்போவியத்தகுநிலையில்விரிந்தது. இலக்குவன் பொருதது. நேரே விர சபதம் கூறி உக்கிர வீரமாய் உருத்து இந்திர, சித்து அம்புகளைக்கொடுத்து அடலாண்மையோடு அமர்புரியவே இலட்சுமணன் கடுத்து மூண்டு கணைகளை அணி அணியாக விடுத்து அடுத்து நின்று அடுசமர் ஆற்றினன். அவன் கடுமை யாப் எய்த அம்புகளையெல்லாம் இவன் சொப்து விலக்கிக் குறிக்கோளோடு கூர்ந்து பொருதான். இரண்டுபேரும் சிறந்த வில்லாளிகள் ஆதலால் எய்த கணைகள் ஒன்றை ஒன்று கவ்வி எங்கும் பறந்து விரிந்தன. நெருப்பு வாணங்கள்போல் புாணங் கள் யாண்டும் சீறி நீண்டு விரைந்து கெடிது பாயவே தேவர் முதல் யாவரும்திகிலடைந்துமறுகிமயங்கிப்பெரிதும்உயங்கினர். இராமன் நின்ற நிலை. இலக்குவன் மூண்டு இந்திரசித்தோடு போராடும்பொழுது இராமன் ஒதுங்கி அயலே ஆயக்கமாய் நின்று வந்தான். முன்பு நாகபாசத்தால் கம்பியை மோசம் செய்து போனவன் ஆதலால் இன்றும் இடையே ஏதேனும் மாயவஞ்சமாய் நீசம் செய்து விடுவானே? என்ற ஐயத்தால் இந்த ஐயன் அந்த வெப்பவனே வேவு பார்த்து வந்தது வித்தகத் திறலாய் மேவி நின்றது. ஒரு சமையம் மேகநாதன் கை மேலோங்கியது; அப்போதும் இரா மன் யாதும் அம்பு தொடாமல் அமைதியாகவே ஆய்ந்துகின் முன். நேர்மையோடு முறையே போராடினுல் தன் தம்பியை அவன் வெல்ல முடியாது என்னும் நம்பிக்கை இந்நம்பியிடம் நன்கு பதிந்திருந்தது ஆதலால் எங்கும் சரம் எடாமல் இனிய பாதுகாப்பாய் எதிர்நோக்கியே வந்தான். இளவல்.பால் உழுவ லன்புடையவனுயினும் அவனுக்கு யாதும் இதம்புரியாமல் நடுவு நிலைமையோடு விழுமிய நிலையில் இக்குலவிரன் விலகி நின்றது தலைமையான தரும நீதி பெருமையாய்த் தழைத்து விளங்கியது. பிறகு கின்றனன் பெருந்தகை இளவலேப் பிரியான் அறமி தன்றென அரக்கன்மேல் சரம் துரங் தருளான் இறவு கண்டிலர் இருவரும் ஒருவரை ஒருவர் விறகின வெந்தன விசுமபிடைச் செறிந்தன விசிகம்.