பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4447 இந்திரசித்தோடு இலக்குவன் போராடும்போக இராமன் மின்று வந்த நிலையை இதனுல் நேரே தெரிந்து கொள்கின்ருேம். இளவலைப் பிரியான் பிறகு நின்றனன் என்ற கல்ை அவன் நின்ற நிலையும் நினவும் குறிப்பும் வெளியே நன்கு தெரிய வந் தன. பிறகு=பின்பக்கம். இதற்கு முன்பு கம்பி போருக்குப் போனபோது இந்த அண்ணன் இவ்வண்ணம் துணையாகச் சென் முதுமில்லை; அணையாக நின்றதும் இல்லை. இர ண்டுதினங்களுக்கு முன்பு இந்திரசித்து செய்துபோனமோசம் இன்று இங்கம் பிக்கு இப்படி ஸ்ச்சரிக்கையைத் தாண்டி நின்றது. மாய வஞ்சமாய் அவன் மோசம் செய்ய நேர்ந்தால் உடனே அவனை நாசம் செய்து வீழ்த்தவேண்டும் என்னும் குறியோடு கோதண்ட விரன் ஒதுங்கி நின்ருன். அந்த நிலை அதிசயமாய் விளங்கியது. இருவரும் எதிர்கின்று நேர்மையோடு சிலைத்தொழிலக் தங்கள் கலைத்திறங்களால் செய்து வருதலால் இவ்வீரக்குரிசில் அமர் யாதும் புரியாமல் அமைதியாய் அயலே ஆய்ந்து வந்தான். பெருந்தகை என இராமனே இங்கே வரைந்து கூறியது நேர்மை நீர்மைகளில் தலைசிறந்து நிற்கும் அவனது நிலைமையை னெந்து தெளிய. கம்பியின்மேலுள்ள அரிய பாசத்தால் இங்கம்பி அயலண்மந்துவரினும் நடுவுநிலை குன்ருமல் அடுதிறலாண்மை யோடு நின்று நிலவும் வீரக்காட்சியை ஈண்டு வியந்து நோக்கி உவந்து வருகிருேம். உத்தம் வீரனுடைய நிலை ஒளிபுரிந்துள்ளது. நெடுநேரம் கடுமையாகப் போராடியும் இருவரும் ஒரு வரை ஒருவர் வெல்லமுடியவில்லை. வேகமும் கோபதாபமும் மேகநாதனிடம் மிகுதியாய் மேவிவந்தன; வரினும் பொருதிற வில் எவ்வழியும் மிஞ்ச முடியாமல் வெஞ்சினமடங்கல்போல் நெஞ்சம் கனன்று நெடிது முயன்று கடிது முனைந்து வந்தான். இறவு கண்டிலர் இருவரும். என்றகளுல் ஒருவரை ஒருவர் அழித்த ஒழிக்க இக்க இருவரும் அன்று மூண்டு போராடியுள்ள நிலையை நாம் நேரே கண்டு கொள்கிருேம். இறவு= இறப்பு, அழிவு. தொலைவு காணமுடியா மல் மலைவுகண்டுள்ளனர். இர ண்டுவீரரும் கொலைநோக்கோடே கொடுஞ் சமர் புரிந்திருக்கலை இகளுல் அறிந்து வருகின்ருேம்.