பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4450 கம்பன் கலை நிலை - மூண்டு போராடிய மேகநாதன் மேகமண்டலத்தில் மறைந்து கொள்ளவே இலட்சுமணன் விரைந்து வேலை செய்ய நேர்க் தான். முன்னம் மறைந்து நின்று நாகபாசத்தை எவி நாசம் செய்தவன் ஆதலால் அந்தவாறு இப்பொழுதும் மோசம்செய்ய நேர்வான்; அவனை உயிரோடுவிட்டு வைத்து வேடிக்கை பார்த் துக்கொண்டு நிற்பது தவறு; விரைந்து கொன்றுமுடிக்க வேண் டும் என்று உறுதிகொண்டு பிரமாஸ்திரத்தைத் தொடுக்கத் துணிந்தான். தனது எண்ணத்தை அண்ணனிடம் சொன்னன்; அந்தப் புண்ணிய விரன் தடுத்து நிறுத்தினன். தம்பி அயன் படையைத் தொடுக்கலாகாது; அது அதிசய ஆற்றலுடையது; மந்திர முறையோடு வெளியே விட்டால் அகில உலகத்தையும் அது காசம் செய்துவிடும். ஒரு பகைவனைக் கொல்ல நேர்ந்து பலரையும் அழிவு செய்வது கொடிய பிழையாம்; அதனை விட வேசுடாது; எதிரியின் நிலைமையை எதிரறிந்து இயைந்த வகை யில்வென்று கொள்வதே நல்லது' என்று இராமபிரான் கூறவே தம்பியும் சரி என்று ஆறி அடங்கினன். அபாயகரமான போரி லும் அறநெறியோடு கூடிய உபாயங்களையே இந்த ஆண்டகை செய்ய மூண்டிருப்பது சீர்மை நிலையாய் நீண்டு நிலவுகின்றது. களைகளைப் பிடுங்கி எறிந்து பயிர்களைப் பாதுகாப்பதுபோல் பொல்லாதவர்களை அழித்து ஒழித்து நல்லவர்களைக் காக்கவேண் டும் என்றே இராமன் ஈண்டு வந்திருக்கின்ருன் ஆதலால் அங் தக் காப்பு முறையும் கருணை நிறையும் காணவந்தன. மாயவஞ் சமாய் மோசம் செய்துபோனவனிடத்தும் நியாய முறையையே கெஞ்சம்கொண்டு போர்செய்ய வேண்டும் என்று தம்பிக்குப் பொருள் பொதிந்த மொழிகளால் இங்கம்பி இங்கே அருள்புரிந் திருக்கிருன். தருமவீரனுடைய கருமம் மருமமாய் மருவியுளது. மறைந்து போனது. தெய்வாஸ்திரத்தைக் கொடுக்கவேண்டும் என்று கடுத்து மூண்ட இளவலைத் தடுத்து இக்குலவிரன் அடக்கியிருக்கும் நிலையையும் அடங்கியுள்ள வகையையும் அந்தரத்தில் மறைந்து கின்ற இந்திரசித்து நன்கு அறிந்துகொண்டான். ஆவதை விரைந் துசெய்யவேண்டும் என்று துணிந்து வானிலிருந்தபடியே இலங் கையை நோக்கிக் கலங்கிய நெஞ்சோடு கடுத்துப் போனன்.