பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4452 கம்பன் கலை நிலை ளசீர்மையை விளக்கிநின்றது. செம்மையான வழிகளிலேயே இளமை தொடங்கிப் பழகியுள்ளவர் ஆகலால் புன்மையான புலை நிலைகளைத் தெரிய முடியாமல் ஆறுதலாய்த் தேறியிருந்தனர். அவன் துணிவை உணர்ந்திலர்; மறந்தார். என்றகளுல் போரில் உடைந்துபோன அவன் கரவோடு துணிந்து சென்றதும், அவனது நிலைமையை ஒரு சிறிதும் கரு தாமல் இவர் பராமுகமா மருவியிருந்ததும் நன்கு தெரியவந்தன. பகை வகையை மறந்து அனைவரும் தொகையாக அமர்ந்து ஈகைமுகத்தராப் உவகையில் ஓங்கி உரிமை கூர்ந்திருந்தனர். சேனைக்கு உணவு. பொருத படைகளுக்கு உறுதி தரும்படி உண்டிகள் கர சேர்ந்து பெருமான் கருதி ஆய்ந்தான். இரவும் பகலும் கடுமை யாக வானரங்கள் போராடியுள்ளன. ΕΠ ல்லாருக்கும் நல்ல உண வுகள் கொடுக்கவேண்டும்; சிறந்த கனி தேன் முதலிய உயர்ந்த உணவு வகைகளை விரைந்து கொணருக' என்று விபீடணனை நோக்கி இராமன் உரைத்தான். அவ்வாறே கொண்டுவருவதாக உறுதிகூறிஉரிய துணையாளர்களோடு அவன்.அயலே போனன். - - ஆயுதபூசை. விபீடணன் அகன்று போனபின் இங்கம்பி தம்பியை நோக்கி ன்ை. 'தம்பி ஆயுதங்களுக்கு உரிய அதிதேவதைகளை இப்பொ முது நான் பூசிக்கவேண்டும். சிறிது தாரத்திலுள்ள ஒரு பொப் கைக்கரை அருகே பரிசுத்தமான இடத்தில் மந்திரமுறையோடு அஸ்திரபூசை செய்து வருகிறேன்; அதுவரையும் கம் Gతాజrఉడిr நன்கு பாதுகாத்துக்கொண்டு நீ இங்கேயே இருக்கருள்” என்று எச்சரிக்கை செய்து விட்டு இராமன் தனியே எழுந்து அயலே போயினன். அனுமான் அங்கதன் முதலிய தலைவர்களோடு தானயைக் காத்துப் பாசறையில் இளையவன் வாசமாயிருந்தான். அன்று பொழுது அடைந்தத: இரவு வந்தது. இந்திரசித்து இயம்பியது. இவர்கள் இங்கனம் இருக்கக் கலங்கிய நெஞ்சனப் இலங்கை புகுந்த இந்திரசித்து தங்தையைக் கண்டான். போரில்