பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4454 கம்பன் கலை நிலை எள்ளில் எண்ணிலர் தம்மொடும் விரைந்தன எகிக் கொள்ளே வெஞ்செரு இயற்றுதி மனிதரைக் குறுகி. (5) மாயை எனறன. வல்லன யாவையும் வழங்கித் தீயிருட் பெரும் பரப்பினேச் செறிவுறத் திருத்தி ஒேருத்தனே உலகொரு மூன்றையும் நிமிர்வாய் போயுருத்து அவர் உயிர்குடித்து உதவுஎனப் புகன்ருன். (6) போரில் உடைந்துவந்த இந்திர சித்து தந்தையை அடைந்து எதிரிகளுடைய வலிநிலைகளைத்தெளிவாகவுரைத்துமோசம்புரிந்தே அவரை காசம் செய்யவேண்டும் என்று மூண்டு நின்றதும், அதற்கு வேண்டிய உதவிகளை அவன் விரைந்து செய்ததும் ஈண்டு விளங்கியுள்ளன. தகப்பனும் மகனும் படு சூழ்ச்சிக ளோடு கொடிய வினைகளைச் செய்யக் கடிது நேர்ந்தனர். “reir பிரமாஸ்திரம் கொடுப்பது எதிரிகளுக்குத் தெரியக் கூடாது; தெரிந்தால் மாறுகணை விடுத்து மாற்றிவிடுவர்; போரில் என்னை நேரே கண்டால் கொன்று தொலைப்பர்; நான் மறைந்து ஒளிந்துகொண்டதாகவே அவர் நினைந்துகொள்ளவேண்டும்; அவர்களுடைய கவனம் முழுவதும் வேறுவழியில் திரும்பி நிற் கும்படி விரகுபுரிந்துகொண்டே என் வேலையை நான் செய்ய வேண்டும்; ஆதலால் இரவு என்று பாராமல் இப்பொழுதே பெரும் படைகளைப் போருக்கு அனுப்பவேண்டும். நெடிய சேனைகளை ஏவிக் கடுமையான போர் அங்கே மூண்டபின்பே நான் கருதியதை முடி க்கமுடியும்” என்று இந்திரசித்து இவ்வாறு தந்தையிடம் கூறவே அவன் அந்தவாறே செய்ய நேர்ந்தான். மகோதரனே அழைத்தான்: ‘'நீ மாயையில் வல்லவன்; அரிய பல காரியங்களை எளிதே சாதிக்கத்தக்கவன்; நூறுவெள்ளம் சேனை களோடு போப் எதிரிகளை நாசம் செய்யவேண்டும்' என்று தாண்டினன். தாண்டவே அரசன் கருதியபடியே உறுதியாய் முடித்துவருவதாக அவன் ஊக்கி எழுந்தான். அகம்பன், அகில கண்டன், மகர குண்டலன், அடும்பலன், ஆகண்டன் முதலிய பெரிய சேனைத்தலைவர்களோடு நெடியசேனைகளை நடத்தி மகோ தரன் ஆரவாரமாய்த் தேர்மேல் எறிப் போர்மேல் போனன். தன்னேக் கொல்வது துணிவரேல், முன்னர்க் கொல்லிய முயல்க.