பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4455 இந்திரசித்து தன் தந்தையிடம் இப்படி ஒரு நியாயத்தை எடுத்தச் சொல்லியிருக்கிருன். இலக்குவன் பிரமாஸ்திரத்தை விக் தன்னைக் கொல்ல மூண்டான் ஆதலால் அவனே எந்தவித மாகவேனும் கொன்றுவிட வேண்டும் என்பதை இந்தவகையால் குறித்தான். அநியாயமான சதியிலும் ஒரு விதியைவிளம்பினன். தன்னைக் கொல்லவந்தால் பசுவையும் கொல்லுக! என்பது பழமொழியாய் வந்துள்ளது. தன்னுடைய உயிரைப் பாதுகாக் கும் பொருட்டு ஒருவன் என்ன காரியமும் செய்துகொள்ள லாம் என்ற கருமக் காட்சியை அவன் இன்னவாறு காட்டி யிருக்கிருன். காரிய சாதனையில் ஒர் வீரியனப் விளங்கினன். தன்.உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினே. (குறள், 827) இது அரிய பெரிய அருள் நீர்மையாம். தனது உயிர்போக நேர்ந்தாலும் பிற உயிர்க்குத் துயர் செய்யாமல் ஒருவன் அடங் கியிருப்பான யின் அவன் உயர் பதவியை அடைகிருன். எவ்வழி யும் சீவ தயையைப் பேணி வருவது திவ்விய மகிமையாம். (ான சீலமுள்ள மேலோர்களே இந்தத் தெய்வீக நிலையை வய்த நேர்கின்றனர். அரிய மாதவர்களுக்கு உரிய இந்த உத்தம தருமத்தை ஒதுக்கி விட்டுத் தனக்கு உரிய சத்திரிய கருமம் எனக் தன் மனத்துக்கு இதமாக் கருதியதை இந்திர சித்து உரிமையாத் தழுவிக் கொண்டான். தங்கள் நிலைமைக்குத் தக்க படியே எவரும் கருமங்களை மருமமாக மருவி வருகின்றனர். உணர்வரேல் தடுப்பர்; காண்பரேல் கொல்வர். தந்தை சிங்தை தெளியும்படி மைந்தன் இப்படித் தெளித் இருக்கிருன். எதிரிகளுடைய அடலாண்மைகளையும் அருந்திறல் களேயும் இந்திரசித்து எவ்வளவுதெளிவாகத்தெரிந்து கொண்டுள் ளான் என்பது இதல்ை தெரியவந்தது. யாண்டும் படாத துய ரங்களே இரண்டுமுறை அவரிடம் பட்டு வந்திருக்கின்ருன் ஆதி லால் உண்மைகளை நன்கு உய்த்துணர்ந்துகொண்டான். மாய வஞ்சங்களால் அன்றி அவரை மாய்க்க முடியாது என்று துணிவு பூண்டமையால் அதற்கு வேண்டியதை விரைந்து செய்தான்.