பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4456 கம்பன் கலை நிலை கள்ள வேடங்கள்கொண்டு கபடத் தீமைகளைக் கடிது செய்ய வல்ல பொல்லாத அரக்கர்பலர் மகோதரனேடு மருவிப்போர்ை. அளவிடலரிய நெடிய சேனைகள் கடல் புரண்டு வருவதுபோல் அடல்கொண்டு வந்து சமர பூமியில் புகவே வானர வீரர்கள் பெரிதும் திகைத்தார். நெடிய திகில்கள் எங்கனும் நேர்ந்தன. நேர்ந்த நிலை. வீடணன் உணவு வகைகளைத் தொகுத்துவர வெளியே போய்விட்டான். இராமன் அத்திர பூசைசெய்யக் கருதிஅயலே ஒர் பொய்கைக்குப் போயினன். இலக்குவன் அமர் நிலையை மறந்து அமைதியாய்த் தனியே யிருந்தான். இந்த நிலையில் வெள் ளப் பெருக்காய்ச் சேனைகள் விரைந்து வந்து புகுந்தன. புகவே முன்புறமாய்ப் பரந்து விரிந்திருந்த வானங்கள் மூண்டு எதிர்க் தன. நீண்ட போராட்டங்கள் யாண்டும் பரந்து நேரே விரிந்தன. நிருதர் பொருத திறம். கொடிய படைக்கலன்களோடு கடுத்துவந்த அரக்கர்திரள் களை வானரங்கள் கொதித்து எதிர்க்கவே யாண்டும் அழிவுகள் நீண்டு மூண்டன. எ வ்வழியும் தலைகளும் உடல்களும் உருண்டு L-|U ண்டு திரண்டு பெருகின. கொலைகளின் நிலைகள் அமரர்களுக் கும் குலைநடுங்கச் செய்தன. கொடுமையான கூரிய ஆயுதங்க ளோடு அரக்கர்கள் யாண்டும் கொதித்து எறிக் கடுமையாகப் போராடினர் ஆதலால் வாணர வீரர்கள் மானத்துடிப்புகளோடு பட்டு மாண்டனர். முதலில் குரங்கினங்கள் நிருகரைப் பொருது தொலைத்தாலும் அடுத்து அடர்ந்து கடுத்து மூண்ட அரக்கர்க ளால் அவை நிலைகுலைந்து நெளிந்து அழிந்து கெடிது மடிந்தன. மழுவும் குலமும் வலயமும் காஞ்சிலும் வாளும் எழுவும் ஈட்டியும் தோட்டியும் எழுமுளேத்தண்டும் கழுவும் வேலொடு கணையமும் பகழியும் காத்த குழுவி ைேடுபட்டு உருண்டன. வானரக் குலங்கள். (1) முற்கரங்களும் முசலமும் முசுண்டியும் முளேயும் சக்கரங்களும் பிண்டி பாலத்தொடு தண்டும் கற்பணங்களும் கணையமும் கவண்விடு கல்லும் வெற்பினங்களே துறுக்கின. கவிகளே வீழ்த்த. (; 2 )