பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.458 கம்பன் கலை நிலை மிகும்படைக் கடலுட் செல்லும் மாருதி விர வாழ்க்கை அகம்பனேக் கிடைத்தான் தண்டால் அரக்கரை அரைக்கும் கையான். சுக்கிரீவன் முதலிய வானரத் தலைவர்கள் கின்று பொரு துள்ள நிலைகள்ை இவை நேரே காட்டியுள்ளன. ஒருவரை ஒருவர் கானர் என்றகளுல் வெகு துரங்களில் தனித்தனியே பிரிந்து கின்று அவர் போர ாடியுள்ளமை தெரிய வந்தது. படைக்கடல் என்றது எல்லேகாண முடியாதபடி பரந்து விரிந்து கெடிது நீண் டுள்ள அதன் நிலைமையை உணர்ந்துகொள்ள. நீர்ச்சமுத்திரம் போல் போர்ச்சமுத்திரம் பொங்கிப் பரந்து எ ங்கும் அரக்கர் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஆரவாரமாய்க் கொந்தளித்தது. அனுமனும் அகம்பனும். அந்தப் படைக்கடலுள் அனுமான் ஓர் இடத்தில் கின்று தண்டம்கொண்டு கிருதரைப் பொருதுதொலைத்து விருதுபெற்று வந்தான்; அவ்வாறு வருங்கால் இடையே வந்து அகம்பன் எதிர்ந்தான். அந்த எதிர்ப்பு அதிசய ஆடலாய் அடர்ந்து மூண் டது. வந்து நேர்ந்த கிருதன் வயிரமான வைரியாய் மூண்டான். அகம்பன் கிலே. இவன் பெரிய போர்வீரன். அடலாண்மையோடு உடல் வலியில் உயர்ந்தவன். அரிய பல ஆற்றல்கள் வாய்ந்தவன். தாரு காசுரனுடைய அமிசமாய் வந்தவன். சூரபன்மனுடைய தம்பி ஆகிய தாருகன் என்னும் அசுரவீரன் முருகக்கடவுள் எவிய வேலால் ஆவி நீங்கினன். அன்று வீர வெறியோடு போராடி மாண்ட அவனே மீண்டு இலங்கையில் வந்து அரக்களுய்ப் பிறந்து இராவணனுக்குப் பெரியசேனதிபதியாய்ச்சேர்ந்துகின் முன். தனியே ஒரு சிற்றரசனைப்போல் இலங்காதிபதி இவனுக் குச் சீர்கள் பல செய்திருந்தான். வில்லிலும் மல்லிலும் வாளி அம் தண்டப்போரிலும் இவன் மிகவும் வல்லவன் ஆதலால் சேனைத்தலைவருக்குள் இவனுக்கு ශිෂ தனி மதிப்பு இருந்தது. மாய வஞ்சமாய்ப் போர்செய்ய மகோதரனை அனுப்பியபோது இவனேயும் சேர்த்து வேந்தன் அனுப்பினன். தனக்கு உரிய படைகளோடு உயர்ந்த தேரில் ஏறி இவன் ஊக்கி வந்தான். அனுமானது வோரை கோக்கினன்; அதிசயித்துகின்ருன்; மக்