பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4460 கம்பன் கலை நிலை தில் கெடிய தண்டமும் சேர்த்துள்ளமையால் பாண்டும் அக் கர்திரள்கள் மடிய நேர்ந்தன. இவனைக்கொன்று தொலைப்பேன் என்று வென்றிவிருேடு தேரைக்கடாவி அகம்பன் வந்தபோதே அவன் கேரே காணும்படி இவ்விரன் தண்டால் அரக்கரைக் கொன்று குவித்து யானைகளை அழித்து வீழ்த்தித் தேர்களைச் சிதைத்து நொறுக்கிக் குதிரைகளைத் தொலைத்து கால்வகைச் சேனைகளையும் நாசமாக்கிக் கால்வகுத்துக் கதிவேகம் காட்டி அதிவேகமாய் வா! வா! என்று அகம்பனை அறை கூவி அழைத் தான். அவன் தேர்மேல் விருேடு வந்ததும் இவன் நேரே போருக்கு அழைத்ததும் வித்தகக் காட்சியாய் விளங்கிகின்றன. அகம்பனும் காணக் காண ஐயிரு கோடிக் கைம்மா முகம்பயில் கலினப் பாய்மா முனேவயின் துரண்டு மூரி நூகம்பயில் தேரி ைேடு துறுக்கினன் நூழில் தீர்த்தான் உகம்பெயர் ஊழிக் காற்றின் உலேவிலா மேரு ஒப்பான். (1) இன்றிவன் தன்னே விண்ணுடு ஏற்றிவான் இலங்கை வேங்தை வென்றியன் ஆக்கி மற்றை மனிதரை வெறியர் ஆக்கி கின் அறுயர் நெடிய துன்பம் அமரர்பால் நிறுப்பன் என்னுக் சென்றனன் அரக்கன் நன்று வருகென அனுமன் சேர்ந்தான். அகம்பனும் அனுமனும் சேர்ந்து நிற்கும் நிலையை இவை நேரே காட்டியுள்ளன. ஆங்காரத்தோடு ஆர்த்து வந்த அக்க அரக்கர் தளபதி முன்னிலையிலேயே பல்லாயிரம் யானைகளைக் கொன்றுகுவித்து வென்றிவிருேடு மாருதிவேலைசெய்துள்ளான். போர்க்களத்தைக் கொடிய கொலைக்களம் ஆக்கி இக்குலவிரன் நிலைத்து கின்றது. நெடிய அதிசயத்தை விளேத்துகின்றது. ஊழிக் காற்றின் உலேவிலா மேரு ஒப்பான். அனுமானே இப்படிக் குறித்து காட்டியிருக்கிரு.ர். அவனது அசையாத ஆண்மையும் இசை ஓங்கிய மேன் மையும் உவமானத்தால் உணரவந்தன. உகாங்ககாலத்தில் எழு கின்ற ஊழிக்காற்ருல் யாவும் நிலைகுலைந்துபோம்; அந்தச்சண்ட மாருதத்தையும் தாங்கி ஓங்கிநிற்கிற மேருமலைபோல் அனுமான் ேேராடு மேவி கின்ருன். கடலைப்போல் திரண்டுவந்த அரக்கர் படைகளையும், காற்றைப்போல் சீறி மோதிய விரர் திரள்களை யும் மே செய்து பாதும் தளராமல் பாண்டும் விரகம்பீரமாய்