பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4,461 நிலத்து நிற்கின்ருன் ஆதலால் அந்த நிலையை இந்த மலை உவமை பால் கவி இங்கே நன்கு விளக்கி நயம் துலக்கியருளினர். இவ்வாறு போராடல் புரிந்து வீரகம்பீரமாய் வீறுகொண்டு நிற்கிற அனுமான நீறுகண்டு விடுவேன் என்று அகம்பன் சீறி வந்தான்; அவனது வரவை நோக்கி நன்று வருக! என்று இவ் வென்றி விரன் தண்டைக் கையில் எந்திச் சண்டைக்குத் தயா ாப் விழைந்து நின்ருன். அந்த நிலை இவனது அதிசய ஆற்றலை விளக்கி அடலாண்மையைத் துலக்கி மிடலோடு மேவி நின்றது. தேரைக் கடாவி நேரே மூண்டுவந்த அவன் அம்புகளைக் கடுத்துத் தொடுத்தான். அனுமானுடைய கலைக்குக் குறிவைத் துக் கொலைக்குறிப்போடு அவன் கொடுத்த பகழிகளையெல்லாம் தடுத்து ஒழித்துச் சாரிதிரிந்து இவ்விரன் தண்டப்போர் புரிந்து வந்தது அதிசயமான வீரக்காட்சியாய் விரிந்து விளங்கியது. ■ கொடுமையாக எதிரி ஏவிய சனைகளைச் சாகசமாய் விலக் வெந்த அனுமான் கடுமையாக நேரே பாய்க் தேரை உடைத் துச் சாரதியை ஒழித்து வாகனங்களையும் தொலைத்து வலசாரி இடசாரியாய்ப் பாய்ந்து வந்தான். ஏறிவந்த தேர் உடைந்த போகவே பெரிய தண்டாயுதம்கொண்டு அவன் தாக்க சேர்க் தான். தண்டப்போரில் அவன் வல்லவன் ஆகலால் மாருதியை விரைந்து வென்று விடலாம் என்று வெகுண்டு மோதி நேரே போராடினன். அவன் கெடிது பயின்று தேர்ந்துள்ள அந்தப் போரில் இவனும் கடிது புகுந்து கடும்போர் புரிந்தான். தேக பலத்தில் சிறந்த இருவரும் வேகமாக வெகுண்டு தாக்கி விர ஆடல்புரிந்தனர். அது விசித்திரக் காட்சியாய் விளங்கிகின்றது. தாக்கினர் இடத்தும் மற்றும் வலத்தினும் திரிந்தார் சாரி ஒக்கினர் ஊழின் ஆர்ப்புக் கொட்டினர் கிட்டிர்ை கீழ்த் தூக்கினர் சுழற்றி மேன்மேல் சுற்றினர் எற்றி வெற்றி நீக்கினர் நெருக்கினர் போய் நீங்கினர் ஏங்கினர் மேல். (1) தட்டினர் தழுவினர் மேல் தாவினர் தரையிைேடும் கிட்டினர் கிடைத்தார் விசிப் புடைத்தவை கீழும் மேலும் கட்டினர் காத்தார் ஒன்றும் காண்கிலார் இறவு கண்ணுற்று ஒட்டினர் மாதி வட்டம் ஒடிர்ை ஆதி போர்ை. (9)