பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,462 கம்பன்கலே நிலை மையொடு பகைத்து கின்ற நிறத்தின்ை வயிர மார்பில் பொய்யொடு பகைத்துகின்ற குணத்தினுன் புகுந்து மோத வெய்யவன் அதனைத் தண்டால் விலக்கினன் விலக்கலோடும் கையொடும் இற்று மற்றைக் கதைகளம் கண்ட தன்றே. (3) அகம்பகுேடு மூண்டு அனுமான் செய்துள்ள சிலம்பப் போரை இங்கே பார்த்து கிற்கிருேம். தாக்கியும் தட்டியும் தடுத் தும் இடித்தும் மடுத்துவந்து மோதியும் மாறி நின்று கட்டியும் பலவகையான சாரிகள் திரிக்தம் இருவரும் மாறிமாறிச் சீறி வருங்கால் அனுமான் கை மேல்ஓங்கி யடித்தான்; அதனை அகம் பன் விரைந்து தட்டுங்கால் தண்டம் ஒடிந்து போயது. அது சிதைந்துபோகவே அவன் சீறிப்பாய்ந்து அனுமானப்பற்றி மல்லாட கேர்த்தான். கோவே தன் கையிலிருந்த தண்டத்தை அயலே வீசி எறிந்துவிட்டு அவன் மார்பில் இவன் ஓங்கிக் குத் தின்ை. பெரிய இடிகள் விழுந்ததுபோல் அந்த அடிகள் விழுங் தவுடன் இரத்தத்தைக் கக்கிக்கொண்டு தலை சிதைந்து அவன் குப்புற விழுக்த செத்தான். அரிய படைத்தலைவன் அழிந்து படவே அரக்கர் பலர் கெடுக்கலங்கி அயலே கடுத்து ஒடினர். பலவகையிலும் சிறந்த போர்வீரனை இவன் கொன்று முடித்தது உயர்ந்த வென்றிவீரமாய் விளங்கி நின்றது. இவனு டைய அடலாண்மையை நினைந்து வியந்து எதிரிகளும் புகழ்ந்து கின்ருர். மெய்யன் வெற்றி பெற்றது மேலான சித்தியாயது. பொய்யொடு பகைத்து கின்ற குணத்தினன். அனுமான இப்படிக் குறித்துக் காட்டியிருக்கிருர், சத்தியசீலனப் வாழ்ந்து வந்துள்ள இவனது உத்தமகிலையை இதல்ை உய்த்துணர்ந்துகொள்கிருேம். பொய்யும் வஞ்சமும் கபடமும் கொடுமையும் நிறைந்த அரக்கன மெய்யும் நேர்மை யும் நெறியும் நீதியும் உடைய இந்த ஐயன் அழித்து ஒழித்தான் என்பதை இங்கனம் சிறப்பான குறிப்போடு தெளித்தருளினர். * இருள் எவ்வளவு செறிந்திருந்தாலும் ஒளிவர ஒழிந்து போம்; அதுபோல் பொப் எவ்வளவு புனைந்து நின்ருலும் மெய் எதிரே அழிந்துபோம். மெய்யனை இந்த ஐயன் பொய்யனை அந்த வெப்யனே அழித்து வென்றுகின்றநிலை என்றும் நன்ருய் எளிதே தெளிவாக விளங்க இவ்வாறு மொழி வழங்க வந்தது.