பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4464 கம்பன் கலை நிலை கவி ஈண்டு உணர்த்தியிருக்கிருர். போராட்டத்தைக் குறித்துக் கூறி வரும்போதும் புனிதமான புண்ணிய நீர்மைகளைக் கண் ணியமாப் போதித்தருள்வது நுண்ணிதா எண்ணியுணரத்தக்கது. கவியின் இதயமும் காவிய போதனையும் விேயங்களா யுள்ளன. வல்லாண்மை மிகவுடைய பொல்லாத அகம்பன மல்லா டல் புரிந்து அனுமான் கொன்றது அதிசய வென்றி ஆதலால் பலரும் அன்று இவனைத் துதிசெய்து நின்ருர். துதிமொழிகள் தொழில் விளைவுகளைத் தெளிவாக விளக்கி எழில் சுரந்துள்ளன. "இருபாற் சேனையும் கனி மருண்டு நோக்க முடுகியற் பெருவிசை உரவுக்கடுங் கொட்பின் எண்டிசை மருங்கினும் எண்ணிறைந்து தோன்றினும் ஒருதனி அனுமன் கையகன்று பரப்பிய வன்மரம் துணிப்ட வேறுபல நோன்படை வழங்கி அகம்பன் தோள் படையாக ஒச்சி ஆங்க, அனுமன் அங்கையின் அழுத்தலின் தனது வன்தலை உடல்புக்குக் குளிப்ப முகம் கரிந்து உயிர்போகு செந்நெறி பெருமையின் பொருகளத்து கின்றன. நெடுஞ்சேட் பொழுதே "(ஆசிரியமாலை) அனுமான் கையால் குத்துண்டு அகம்பன் செத்திருக்கும் நிலையை இது குறித்துள்ளது. குறிப்பைக் கூர்ந்து ஒர்ந்துகொள் ளவேண்டும். அடிபட்ட கலை உடலில் புகுந்து கவந்தமாய் நீண்ட நேரம் தோன்றி கின்று அதன்பின் மாண்டு விழுந்தது என்றத ஞல் மாருதியின் ஆண்டகைமையினே அறிந்துகொள்கின்ருேம். இலங்கைப்போரில் நிகழ்ந்த இந்த வீர நிகழ்ச்சி எங்கும் வியந்து பேச நேர்ந்துள்ளது என்பதை இக்கவி இங்கே காட்டியுள்ளது. இலக்குவனைக் கண்டது. அகம்பனே அழித்து இங்கனம் அதிசய வெற்றிபெற்ற அனுமான் அயலே நோக்கினன். கோர ஒலிகளோடு சேனைக் கடல் எங்கும் பொங்கிப் பரந்து நின்றது. அங்கதன் முதலிய துணைவர் யாவரும் ஒருவர் நின்றவிடம் ஒருவருக்குத் தெரியாமல் தனித்தனியே பிரிந்து நின்று அங்கங்கே போராட நேர்ந்தனர். இலக்குவன் எங்குள்ளானே? என்று அனுமான் எங்கி விரைக் தான், ன் ல்லகாண முடியாதபடி யாண்டும் பெருகி விரிந்து நிரு