பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4466 கம்பன் கலை நிலை நிலைமையும் சரியாகத் தெரியவில்லை? பலவகையாயப் பிரிந்து கின்று படுசமர் செய்ய சேர்ந்துள்ளோம்; நம்முள் யாருக்கு என்ன நேர்ந்தது என்பதை நேருக்கு நேரே காணமுடியவில்லை; திசைகள் தோறும் சிதறி நிற்கிருேம். எதிரியின்-படைகள் கடல் கள்போல் மேலும் மேலும் பெருகி வருகின்றன. யானே குதிரை கள் முதலிய சேனைகள் எல்லாம் அழிந்து வீழ்ந்தும் மறுபடியும் அந்த இடத்தில் வந்து படைகள் நெளிந்து நிற்கின்றன. நம்ம வர் நிலைமையை யாதும் அறியமுடியாமையால் பரிதாபமாயிருக் கிறது; நீ அறிந்திருப்பாப் என்று நான் ஆறுதலடைந்துள் ளேன்; தெரிந்த விவரங்களையெல்லாம் தெளிவாகச் சொல்' என இங்கனம் இளையவன் கேட்கவே அனுமான் மறுகி உரைத் தான். அவனுடைய உரை பரிவு தோய்ந்து உரிமை சுரந்துவந்தது. ‘ஐயனே யாதொரு விவரமும் எனக்கு நேரே தெரியவில்லை; வானாத் தலைவர் ஒருவர் போனவழி ஒருவருக்குத் தெரியாமல் பிரிந்து போயுள்ளனர்; நேர்ந்த திசைகளில் போர்மேல் மூண்டு போனவர் மீண்டுவந்து சேர க்காணுேம்; என்ன நிலையில் எங்கே நிற்கின்றனரோ? பாதும் தெரியாமல் இன்னலுழந்து ஈண்டுவக் தேன்; ஆண்டவனேக்கண்டேன்; எனக்குப் ப்ெரிய ஆனந்தம் ஆயது; நம்மவரை விரைந்து காணவேண்டும்; அதற்குவேண் டிய வேலையை மூண்டு செய்ய வேண்டும்’ என இன்னவாறு அனுமான் கூறவே இளையவன் உன்னியுளேந்து உறுதிகூர்ந்தான். மூண்டு போராடிய படைகளை மாண்டுபட நூறி வெற்றி கொண்டு நின்றவன் மாருதியைக் கண்டதும் உற்ற துணைவர்க ளைக் காணவிழைந்து ஊக்கிவிரைந்தான். அதிசய மதிமானை அனுமான் வந்தது பெரிய ஆறுதலைத் தந்தது. விசயப்பாவை துர்த்தன் என அவனே வார்த்துக்காட்டியிருப்பது அதிசய மா . சிகளைத் துலக்கி நின்றது. வெற்றித் திருவின் உற்ற உருவமாய் அவன் ஒளிபுரித்துளான். அவனதுகொற்றம்முற்றியமகிமையது. வேலேயோடும் அயிந்திரப் பரவை தாயினன். மேலே அனுமானது விரவெற்றிகளை விளக்கினர்; இதில் அவனது கலைஞானங்களைத் துலக்கினர். அதிசயவீரன்; அம்புத மேதை என்னும் வித்தக நிலைகள் இங்கே விழிதெரிய வந்தன.