பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,469 ாதிரிகள் நாசமடைந்து ஒழிந்ததும் அதிசயக் காட்சிகளாப் நின்றன. அற்புத வெற்றியை நோக்கி அமரரும் துதித்தனர். அன்னது புரிவன் என்ன ஆயிர காமத் தண்ணல் தன்னேயே வணங்கி வாழ்த்திச் சரங்களேத் தெரிந்து தாங்கிப் பொன்மலே வில்லின்ை தன் படைக்கலம் பொருந்த ஏந்தி மின் எயிற்று அரக்கர் தம்மேல் விசினன் வில்லின் செல்வன். (1) முக்களுன் படையை மூட்டி விடுதலும் மூங்கில் காட்டில் புக்கதோர் ஊழித் தீயிற் புறத்தின் ஒர் உருவும் போகாது அக்கணத்து எரிந்து வீழ்ந்தது அரக்கர்தம் சேனே ஆழித் நிக்கெலாம் இருளும் தீர்ந்த தேவரும் மயக்கம் தீர்ந்தார். (2) தேவர்தம் படையை விட்டான் என்பது சிங்தை செய்யா மாவரு மாயை நீங்க மகோதரன் மறையப் போனன்; யாவரும் இரிந்தார் எல்லாம் இனமழை கழிய ஆர்த்துக் கோவிளங் களிற்றை வந்து கூடினர் ஆடல் கொண்டார். (3) யாவர்க்கும் தீதிலாமை கண்டு கண்டு உவகை ஏறத் தேவர்க்கும் தேவன் தம்பி திருமனத்து ஐயம் தீர்ந்தான்; காவற்போர்க் குரக்குச் சேனே கல்லெனக் கலந்து புல்லப் பவர்க்கம் இமையோர் தூவப் பொலிங்கனர் தூதர் போனுர் (4) பாசுபதாஸ்திரத்தால் அரக்கர் சேனையை இலக்குவன் அழித்துள்ளதும், மகோதரன் மறைந்துபோனதும், தாதவர் இலங்கையை நோக்கி விரைந்து ஒடியதும், இங்கே துலங்கி நின் |றன. மந்திரசித்தியோடு கூடிய அற்புத அம்புகள் இளையவனி _ம் மருவியிருத்தலையும், அவற்றின் அற்புத நிலைகளையும் மாருதி ான்கு அறிந்தவன் ஆகலால் பாசுபதாள்திரத்தை ஏவும்படி தூண் டிவேண்டினன். ஊழிக்காலத்தில் உருத்திர மூர்த்தி உலகங்களை அழிக்கல்போல் அவன் மந்திர நிலையில் அமைந்த அம்பும் வந்து நின்ற சேனைத்திரளையெல்லாம் விரைந்து நாசம் செய்து ஒழித் க. பசுபதி அருளால் வந்தது பாசுபதம் என நின்றது. இந்தச் சிவாஸ்திரத்தால் படைக்கடல் பாழாயழியவே மாயா வல்லவ குன மகோதரன் மாயாமல் மறைந்து போயினன். அவன் மாக் நிரம்தான் அன்று தப்பிப் பிழைத்தான்; மற்றவர் யாவரும் மாண்டு மடிந்தனர். சேனைப் பரப்பிலிருந்து யாரும் மீண்டுபோ வில்லை. எ ல்லாரும் ஒருங்கே விரைந்து இறந்து ஒழிந்தனர்.