பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4470 கம்பன் கலை நிலை புறத்தின் ஓர் உருவும் போகாது எரிந்து வீழ்ந்தது. மூண்டுவந்த சேனையிலிருந்து மீண்டுபோன பொருள் யாதொன்றும் இல்லை என்பதை இது கன்கு விளக்கியுள்ளது. ஊழித்தியில் அகப்பட்டசெத்தைகளைப்போல்.எ ல்லாரும் அடியோ டு செத்து ஒழிந்திருத்தலை ஈண்டு உய்த்துணர்ந்து கொள்கிருேம். i. - வென்று நின்றது. வில்லின் செல்வன் என இலக்குவனே இங்கே சொல்லியது சிலையின் கலையில் அவன் தலைமைபெற்றிருக்கும் நிலைமை தெரிய வந்தது. கடல்போல் பொங்கிப் பரந்து எங்கும் பொருதமூண்ட கிருகர் படைகள் யாவும் அடியோடு அழிய ஒரு நொடியில் அடுகணை தொடுத்த விடுத்த அதிசய வெற்றியைநோக்கி அமரர் முதல் யாவரும் வியந்து மகிழ்ந்து இவ்விரக் குரிசிலைப் புகழ்ந்து போற்றினர். அரிய வெற்றி பெரிய வியப்பாய்ப் பெருகிகின்றது. ஒளி புகுந்தபோது இருள் ஒழிந்துபோனதுபோல் சிவாஸ் திரம் சேர்ந்தவுடனே மகோதரன் விரைந்து மறைந்து போனன். இளையபெருமாளுட்ைய வில்லாடலையும் அற்புத ஆற்றலையும் எண்ணி வியந்து விண்ணில் இருக்கபடியே வெருவி விலகி அவன் ஒருவிப்போகவே பொருகளம் முழுவதும் வெறுவெளியாய் நின் றது. சமர பூமியின் நிலையை நோக்கி அமரர் யாவரும் வியந்தார். வானரங்கள் குழுமியது. பல இடங்களிலும் பிரிந்து நின்று அருந்திறலோடு அமரா டிய வானர விரர்கள் எ ல்லாரும் விரைந்துவந்து ஒருங்குதிரண்டு பெருங்களிப்போடு பெருகிகின்றனர். வெற்றிக்களிப்பில் விரிந்து நிறைந்துள்ளவரது நிலைமையை நோக்கி இக்கொற்றக் குரிசில் உள்ளம் உவந்து உரிமைமீதுார்ந்தான். தன்னுடைய பாதுகாப் பில் இருக்கும்படி அண்ணன் அருள்புரிந்துபோன படைகள் இடையூறின்றி அவ்வண்ணம் அமைந்து கின்றது தம்பிக்குப் பேருவகையைக் கந்தது. அஇதுமா னுடைய ஆலோ சனேயின்படி ஈசன் கணேயைத் தொடுத்து எதிரிகளை நாசப்படுத்திவிட்டு உரி மையாளரோடு உவந்து இளையவன் இனிது அமர்ந்திருந்தான். ஒற்றர் உற்றது. இங்கே சேர்ந்த அழிவு நிலைகளை அறிந்ததும் ஒற்றர்கள்