பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4472 கம்பன் கலை நிலை அரண்மனைக்குவந்தார். காவலாளிகள் கடுத்து நிறுத்தினர். அர சனுடைய ஆணையின்படியே அரிய காரியம் ஒன்றை உரிமை யோடு உரைக்க வந்திருப்பதாக அவர் உணர்த்திவேண்டவே தடுத்துகின்ற காவலர் அவரை அடுத்துவிடுத்தார். தாதர்உள்ளே புகுந்தார். அமளியில் படுத்திருந்த வீரனிடம் அமைதியாய்ப் போப் அஞ்சி வணங்கி நெஞ்சம் துணிந்து நிகழ்ந்ததையெல், லாம் மரியாதையோடு நேரே உரைத்தார். அவன் கெடிததிகைத் தான்; கடிது விரைந்து முடிவான நிலைகளை அவரிடம் மருமமாப் வினவினன். அவர் யாவும் விவரமா விளக்கி மொழிந்தார். தோடவிழ் அலங்கல் என்சேய்க்குஉணர்த்துமின் என்னச் சொன்னன் ஓடினா சாரர் வல்லே உணர்த்தினர் துணுக்கம் எய்தா ஆடவர் திலகன் யாண்டை யான்? இகல் அனுமன் ஏைேர் * வீடணன் யாங்கண் உள்ளான்? உணர்த்துமின் விரைவின் என்ருன். வந்திலன் ராமன் வேறு ஒர் மலேயுளான், உங்தை மாயம் தந்தனதேர்வான் போனன் உண்பன தாழ்ப்பத் தாழா எங்தை ஈது இயனறது என்ன மகோதரன் யாண்டை என்ன அந்தரத் திடையான் என்ன இராவணி அழகிற்று என்ருன். (2) (பிரமாத்திரப்படலம், 162, 163) வந்த தாகரிடம் பொருகளத்தின் அந்தரங்கங்களை மேகநாதன் வினவியறிந்துள்ள நிலைகளை இ ைவ விளக்கியிருக்கின்றன. கொடிய மாயப்போரைக் கடிதுசெய்யும்படி மகோதரனுடைய தல்ைமையில் அனுப்பியிருந்த சேனைத்திரள்கள் எல்லாம் ஒருங்கே நாசம் அடைந்துள்ளதைக் கேட்டதும் இந்திர சித்து வாட்டம் மிகுந்து வருந்தி கொந்தான். நெடுந்திகிலாய் நெஞ்சம் கலங்கி அவன் நடுங்கியிருக்கும் நிலையைத் துணுக்கம் என்னும் ஒரு மொழியால் துணுக்கமாக வுணர்த்தியுள்ளார். துணுக்கம்=நிலை குலைந்து நடுங்குதல். வீரனது நடுக்கம் விளைவினை விளக்கியது. தன் படைகள் பாழாய் அழிந்தன என்று தெரிந்ததும் எதிரிகளின் நிலைகளை அவன் அறிந்துகொள்ள விழைந்தான். அாதுவர்களிடம் அதனை அதிக வியமாய் ஆவலோடு வினவினன். ஆடவர் திலகன் யாண்டையான்? இராமனேக் குறித்து இந்தி சித்து இப்படிக் கேட்டிருக்கி முன். மனித சாதியை மிகவும் எளிமையாக இகழ்ந்து வந்தவன்