பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 4478 கம்பன் கல நில அனேயன் கின்றனன் அவ்வழி மகோதரன் அறிந்து ஒர் வினேயம் எண்ணினன் இந்திர வேடத்தை மேவித் துனவலத்து ஐராவதக் கழுத்தின்மேல் தோன்றி முனைவர் வானவர் அவரொடும் போர்செய மூண்டான். (1) அரக்கர் மானுடர் குரங்கெனும் அவைஎலாம் அல்ல உருக்கள் யாவுள உயிரினி உலகத்தின் உழல்வ தருக்கு போர்க்குடன் வந்துளவாமெனச் சமைத்தான் வெருக்கொளப்பெரும் கவிப்படை குலைந்தது விலங்கி. (2) கோடு நான்குடைப் பால்நிறக் குன்றமேல் கொண்டான் ஆடல் இந்திரன் அல்லவர் யாவரும் அமரர் சேடர் சிந்தனே முனிவர்கள் அமர்பொரச் சீறி ஊடுவந்துற்றது என்கொலோ கிபம்என உலேந்தார். (3) அனுமன் வாண்முகம் நோக்கினன் ஆழியை அகற்றித் தனுவலம் கொண்ட தாமரைக் கண்ணவன் தம்பி முனிவர் வானவர் முனிந்துவந்து எய்தயாம் முயன்ற் துணிகள் என்கொலோ சொல்லுதி விரைந்துஎனச் சொன்னன். மகோதரன் இவ்வாறு மாயவஞ்சமான தீய வேலைகளைச் செய்திருக்கிருன். தேவர் கந்தருவர் சித்தர் முதலிய யாவரும் திரண்டு தேவராசனேடு சேர்ந்து வந்து போராடல் புரிவதைக் கண்டதும் வானரங்கள் மறுகி மயங்கின. என்ன காரணத்தால் வானவர் இன்னவாறு வெகுண்டு மூண்டு வெம்போர் புரிகின் முர்? என்று சேனைத் தலைவரும் மயங்கிச் சிங்தை கலங்கினர். அமைதியாய்த் தனியே அமர்ந்திருக்க இலக்குவன் அபாய மாய் நேர்ந்த ஆரவாரங்களையும் போர் முழக்கங்களையும் நேரே கண்டு என்னே! இது' என உன்னி வியந்து அயலே நின்ற அனுமான விரைந்து நோக்கினன். 'விண்ணவர் சீறிவந்து இவ் வண்ணம் போர்புரிய நாம் என்ன பிழை செய்தோம்?' என்று இளையவன் உளைந்து வினவவே யாதும் தெரியாமல் அனுமானும் திகைத்தான். இளவல் மறுகிக் கடிது விரைந்தான். அமரர் அமர்பொர யாம் முயன்ற துணிகள் என்? தேவர்களுக்குக் கோபம் வரும்படி காம் யாதும் செய்ய வில்லையே; அவர் இவ்வாறு முனிந்துவந்து துணிந்து பொருவது என்? என இளவல் மறுகிவினவியிருப்பது பரிபவமாய் கின்றது.