பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4482 கம்பன் கலை நிலை கத்தை ஆரவாரமாய்ச் செய்தான். கருதிய கருமங்கள் யாவும் உறுதியாய் முடிந்தன என உள்ளம்செருக்கி உவகை மீக்கூர்ந்து ஊரைநோக்கி அவன் மீள நேர்ந்தான். அவனுடைய வெற்றிக் களிப்புகள் எல்லைமீறி நின்றன. ஆதலால் எல்லாவற்றையும் தங் கையிடம்போய்ச் சொல்லவேண்டும் என்று ஒல்லையில் விரைந் தான். உள்ளம் துள்ளிய உவகையோடு ஊருட் புகுந்தான். . வெங்கண் வானரக் குழுவொடும் இளையவன் விளிந்தான்; இங்கு வந்திலன் அகன்றனன் இராமன் என்று இகழ்ந்தான்; சங்கம் ஊதினன் தாதையை வல்லேயில் சார்ந்தான் பொங்கு போரிடைப் புகுந்துள பொருள்ளலாம் புகன்ருன். (1) இறங்கிலன் கொல் அவ் இராமன் என்று இராவணன் இசைத்தான் அறந்து நீங்கினன் அல்லனேல் தம்பியைத் தொலைத்துச் . சிறந்த நண்பரைக் கொன்று தன் சேனையைச் சிதைக்க மறந்து கிற்குமோ மற்றவன் திறன் என்ருன் மதலே. (2) அன்னதே என அரக்கனும் ஆதரித்து அமைந்தான் சொன்ன மைந்தனும் தன்பெருங் கோயிலைச் சூழ்ந்தான் மன்னன் ஏவலின் மகோதரன் போயினன் வந்தான் என்னே ஆளுடை நாயகன் வேறிடத்து இருந்தான். (3) இக்கிரசித்து போர்க்களத்திலிருந்து வெற்றிக்களிப்போடு மீண்டுவந்து கங்கையைக் கண்டு ஆண்டு நிகழ்ந்த அதிசயங்களை யும் அனுகூலங்களையும் தெளிவாக உரைத்துச் சிந்தை களித்தி ருக்கும் குறிப்புகள் இங்கே நன்கு வெளியாயுள்ளன. . " மூண்டுவந்த படைகள் யாவும் மாண்டு மடிந்தன என்று அவன் மகிழ்ந்திருக்கும் மகிழ்ச்சி உரைகள்தோறும் ஓங்கிநின் றது. அதிசய வீரர்கள் என்று தெரிந்து எதிரிகளைக் கருதும் தோறும் மறுகி மயங்கிவந்தவன் ஆதலால் இன்று அவர் ஒழிந்து தொலைக்கார் என்னும் உறுதியால் உள்ளம் களித்து உவகை மீதார்ந்து பெருமிதம் பெருகிப் பேச நேர்ந்தான். பகைவகை அடியோடு அழித்து ஒழிக்கது என்று அவன் முடிவாகக் கருதி மகிழ்க் துள்ளது உரைகள்தோறும் மருமமாய்த் தெரிய வந்தது. இளையவன் விளிந்தான்; இராமன் அகன்ருன். இந்திரசித்து இப்படி உறுதியாய்க் கருதியிருக்கிருன்.