பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராமன் 4485 யெல்லாம் ஒருங்கே நான் கொன்று தொலைத்ததை அறிந்ததும் அவன் அஞ்சி அயலே ஒளிந்துகொண்டான்; நல்ல மானமும் வி மும் உடையவன் ஆல்ை உடன்வந்தவர்களை அழித்துஒழித்த என்னேடு எ திர்த்தப் பொருது அவன் மடிந்திருக்கவேண்டும்: அவ்வாறு வீரமரணத்தை அடையாமல் அயலே மறைந்து போனது அவனது அவல நிலையை விளக்கி நின்றது. அச்சமும் நிகிலும் உள்ளத்தில் உச்சமாய் ஓங்கி எழுந்தமையால் கொச் சையாய் ஒடி ஒளிந்துபோனன். பேடியர்போல் ஓடி மறைந்து போன அவன் மீண்டு ஈண்டு வரவே மாட்ட்ான்; அவன் உயிர் தப்பிப் பிழைத்திருத்தலைக் குறித்து நீங்கள் யாதும் கவலையாய் பாண்டும் உளையவேண்டாம்” என்று உறுதி கூறித்தேற்றிஞன். துறந்து நீங்கினன். இராமன் இறந்தபடவில்லையோ? என்று அல்லலுழந்து கேட்ட இராவணனுக்குச் செல்ல மகன் இப்படி வரைந்து சொல்லி யிருக்கிருன். இருவர் நிலையும் ஒருமுகமாய் ஈண்டு உணரவங்தது. தம்பியைத் தொலைத்து, நண்பரைக் க்ொன்று, சேனைகளைச் சிதைத்து ஒழிக்கவே தானும் செத்துமடிய நேரும் என்று சித் நம் கலங்கி இராமன் விரைந்து மறைந்து ஒடிப்போனன் என மேகநாதன் விவேக சூனியமாய் உரையாடி நின்ருன். நேர்ந்த இழவுகளைக் கண்டதும் உலக வாழ்க்கைகளையெல்லாம் அறவே வெறுத்து விட்டுத் துறவியாய் ஒருவிப் போனன் என்னும் குறிப்பு துறந்து நீங்கினன் என்றதில் மருவியுள்ளது. * T - m . . . . . - H= o o வென்றி விருேடு வந்துள்ள விரமகன் இவ்வாறு கூறவே இராவணன் ஆர்வம் மீதுளர்ந்து அகம் மிக மகிழ்ந்தான். மூண்ட சக்கரு முடிந்து தொலைந்தான் என நீண்ட உவகை கெஞ்சில் மிெர்ந்தது; நெடுஞ் செருக்கும் மூண்டு நீண்டுகின்றது. உள்ளம் களித்திருந்த தங்தைக்கு மேலும் சில உறுதிகளைக் கறிவிட்டு அவனிடம் விடைபெற்றுக்க்ொண்டு இந்திரசித்து -ன.து அரண்மனைக்குப்போனன். பிள்ளையும் பிதாவும் பேசி ாழ்க்க செய்தி ஊர் எங்கும் பரவிப் பேருவகையாய் விரிந்தது. வற்றி நிலையைக் குறித்து விளைந்த பேச்சுகள் இலங்கை எங்க _ம் பரந்து கின்றன. களியாட்டங்கள் வெளியாட்டமாயின.