பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4486 கம்பன் கலை நிலை இராமன் எழுந்தது. விரதேவதையை நன்கு வழிபட்டு மந்திர முறையோடு கோதண் டவீரன் செய்த பூசை ஐந்து நாழிகை அளவில் முடிந்தது. அத் திரங்களின் அதி தேவதைகள் இவ்வுத்தம வீரனுடைய பூசனை யில் உவகைமீக்கூர்ந்தன. தனுவேதத்தில் மருமமாய் மருவியுள்ள அரிய மந்திரங்களை இனிது மொழிந்து பெரியவன் செய்த பூசை பெருமகிமையாய் விளங்கியது. விரலட்சுமியும் விஜயலட்சுமியும் உள்ளம் உவந்து இவ்வள்ளலுக்கு வர சித்திகளை நல்கின. அத்திர பூசைகளை முடித்து எழுந்ததும் எத்திசைகளிலும் இருள் பரவி யிருந்தது ஆதலால் பொருகளம் நோக்கி அக்கினியா ஸ்திரத்தை நீட்டி ஆவலோடு வந்தான். அந்த வரவு.அதிசயமாய் விளங்கியது செய்ய தாமரை நாண் மலர்க் கைத்தலம் சேப்பத் துய்ய தேவர்தம் படைக்கெலாம் வரன்முறை துரக்கும் மெய்கொள் பூசனை விதிமுறை இயற்றிமேல் வீரன் மொய்கொள் போர்க்களத்து எய்துவாம் இனி என முயன்ருன். கொள்ளி யிற்சுடர் அனலிதன் பகழிகைக் கொண்டான் அள்ளி நுங்கலாம் ஆரிருட் பிழம்பினே அழித்தான் வெள்ள வெங்களப் பரப்பினேப் பொருக்கென விழித்தான் தள்ளில் தாமரைச் சேவடி நுடங்குறச் சார்ந்தான். (2) அத்திர பூசையை முடித்துவிட்டு அமர்க்களத்தை நோக்கி இராமன் வந்துள்ள நிலையை இவை வரைந்து காட்டியுள்ளன. பொருகளத்தின் எல்லையை அடைந்ததும் உள்ளம்திகைத்தான்; படைகள் படுகாசமாய் மடிந்துகிடக்கும் நிலை நெடிய திகிலே விளைத்தது. ஒரு வானரமும் உயிரோடு இல்லாமல் யாவும் செக் துக் கிடப்பதைக் கண்டதும் சித்தம் கலங்கி உம்மது ஒன்றும் தெரியாமல் மறுகி உள்ளே விரைந்து புகுந்தான். சேனைத்தலைவர் களுக்கு இடையே சுக்கிரீவன் கிடக்கும் பரிதாப நிலையைப் பார்த்தான். நெஞ்சம் துடித்து கெடிது பதைத்தான். கண்ணிர் மல்கி மறுகி அயர்ந்து நின்றவன் அயலே சிறிது தாரத்தில் கிடந்த அனுமனைப் பார்த்ததும் அலறி ஒடி அருகே நெருங்கி உருகி நோக்கி உள்ளம் துடித்தான். உளைந்து புலம்பினன்.