பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா ம ன் 4487 அனுமனைக்கண்டு புலம்பியது. கடல் கடந்துபுக்கு அரக்கரைக் கருவொடுங் கலக்கி இடர் கடந்து நான் இருக்கே நல்கியது இதற்கோ? உடல் கடந்தனவோ உனே அரக்கன்வில் உதைத்த அடல் கடந்தபோர் வாளி என்று ஆகுலித்து அழுதான். முன்னத் தேவர்தம் வரங்களும் முனிவர்தம் மொழியும் பின்னச் சானகி உதவியும் பிழைத்தன. பிறந்த புன்மைச் செய்தொழில் என்வினைக் கொடுமையால் புகழோய்! என்னைப் போல்பவர் ஆருளர் ஒருவர்? என்று இசைத்தான் (2) புன்தொழிற்புல அரசினே வெஃகினேன் பூண்டேன் கொன்று ஒருக்கினேன் எங்கையைச் சடாயுவைக் குறைத்தேன் இன்று ஒருக்கினேன் இத்தனை வீரரை இருந்தேன் வன் தொழிற்கு ஒரு வரம்பும் உண்டாய் வர வற்ருே? (3) அங்கதனை நோக்கி அழுதது. விடைக் குலங்களின் நடுவண் ஒர் விடைகிடங் தென்னக் கடைக்கன் தியுக அங்கதக் களிற்றினேக் கண்டான்; படைக்கலங்களைச் சுமக்கின்ற பதகனேன் பழிபார்த்து அடைக்கலப் பொருள் காத்தவாறு அழகிஅஎன்.அறு அழுதான். படுகளம் புகுந்த இராமன் அங்கே பரிதாபமாப் மடிந்து டைந்த அனுமானையும் அங்கதனையும் கண்டு மனம் பதைத்து மறுகிப் புலம்பி உருகி கின்ற நிலையை இவை நன்கு உணர்த்தி புள்ளன. மாருதியின் பேரன்பும் விரபராக்கிரமங்களும் உபகார நிலகளும் உள்ளத்தை உருக்கியிருத்தலால் உரைகள் உருகிவங் கள்ளன. பலவும் நினைந்து பரிந்து புலம்பினன். ' அங்கோ ! அனுமா! யாரும் கடக்கமுடியாத நெடிய கடலை நேரே கடந்து இலங்கை புகுந்து எனது அருமை மனைவியைக் கண்டு ஆறுதல் கூறி ஆற்றித் தேற்றி ஆதரவு புரிந்து மோதி மூண்டு வாதாட நேர்ந்த அரக்கர் திரள்களைக் கொன்றுதொலைத்து அதிசய வென் றியோடு மீண்டுவந்து என் துன்பங்களையெல்லாம் அடியோடு விக்கிப் பெரிய இன்பங்களை நல்கியருளிய பேருபகாரியே! பேர ருளாளா! நேர்எவரும் நேரா நெடிய போர்விரா! உனக்கு நான் யாதொரு உதவியும் செய்யவில்லையே! கொடிய இந்தப் பரிதாப