பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4488。 கம்பன் கலை நிலை நிலையில் பார்க்க நேர்ங்தேனே! மாய வஞ்சகனை அங்கக் தீய வன் ஏவிய பானங்கள் தாய நெஞ்சனை உன்னே ஊடுருவிப் போகவும் நேர்ந்தனவே! ஆதியில் உனக்குத் தேவர்கள் உரிமை யோடு அருளிய வரபலங்கள் எங்கே? சீதை தந்த ஆதரவுகள் எங்கே? தேவர் முதல் யாவரும் நீ யாண்டும் சேமமாயிருக்க வேண்டும் என்று வாழ்த்தியருளிய ஆசிமொழிகள் எல்லாம் அவலமாய்ப்போக நீ ஈண்டு மாண்டு மடிந்துள்ளாயே! இந்த மடிவு உன்னைச் சேர்ந்தது அன்று, என்னை நீ சேர்ந்து நின்ற பாவத்தால் உனக்கு இப்படி முடிவு நேர்ந்துள்ளது. என்னைப் போல் கொடியவர் யார் உளர்! அடுத்தவர் எ வர்க்கும் யாண்டும் அவகேடுகள் நேரும்படியான கொடியபாவியாய் நான் கெடிது நீண்டுள்ளேன். பெற்ற தங்கையைப் பிழையாய்க்கொன்றேன்; உற்ற கங்தையாய் உரிமையோடு உதவிபுரியவந்த சடாயுவைத் தொலைத்தேன்; எவ்வழியும் உழுவலன்புடன் செவ்விய ஆதரவு கள் புரிந்துவந்த திவ்விய விரனை உன்னே இன்று இப்படிச் சாகும்படி செய்தேன்; துணைபுரிய நேர்ந்தவர் எ ல்லாரும் அணி அணியாய் மாண்டு மடிய ஐயோ! நீண்ட வில்லொடு நேரே கண்டுகொண்டு நிற்கின்றேனே! என்பிறப்பும் ஒரு பிறப்பா? நான் உயிர் வாழ்ந்திருக்கவேண்டுமா? துயர்களுக்கேநிலையமான நான் உயிரை வைத்திருப்பது எவ்வளவு இழிவு எத்தனே அவ மானம்? புகழ் ஒளியை எங்கும் விசிப் பொங்கிய மகிமையோடு பொலிந்து வந்துள்ள எனது குலமும் குடியும் பலவகையிலும் பழி படிய கான் உருவாகி யிருக்கின்றேனே!” என இன்னவாறு இன்னலுழந்து கோதண்டவிரன் குலேதுடித்து அழுதிருக்கலால் நேர்ந்துள்ள துயரத்தின் நிலைகளை நேரே தெரிந்து கொள்ளலாம். தன் பால் பேரன்பு பூண்டு யாண்டும் உள்ளம் உருகி உரி மையோடு ஊழியம் புரிந்து வந்தவன் ஆதலால் அனும்ானது அழிவு நிலையைக் கண்டதும் விழிநீர் சிந்தி வெய்துயிர்த்துப் பெரிதும் மறுகி இவ் விழுமிய விரன் அழுத ஆவலித்தான். அரக்கன் வாளி உனை உடல் கடந்தனவோ? பகைவன் ஏவிய பானங்கள் உடலை ஊடுருவிப் போக அடலழிந்து கிடக்கின்ருன் ஆதலால் அக் கிடையை நோக்கி அவலத்துடிப்போடு இக்குலமகன் இங்கனம் புலம்பியுள்ளான்.