பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4494 கம்பன் கலை நிலை தம்பியின் நிலைமையைப் பார்த்ததும் உள்ளம் துடித்து உயிர்பதைத்து உணர்விழந்து விழுந்தான்; விழுந்தவன் யாதும் அசையாமல் அவ்வாறே கம்பியைத் தழுவிக்கொண்டு உழுவலன் போடு உருகி உயிர் மறுகித் துயர் இலஞய் அழுந்திக் கிடந்தான். உயிர்த்திலன் ஒரு நாழிகை; உணர்ந்திலன் ஒன்றும். கீழேவிழுந்த இராமனது நிலைமையை இது விழிதெரிய விளக்கி யுள்ளது. பரிவும் பரிபவமும் உரைகளால் அறிய அரியன. ஒரு நாழிகை நேரம் மூச்சு அடங்கியிருக்கிறது. உயிர்போ னதுபோலவே யாதும் தெரியாமல் அவசமாய்க் கிடந்துள்ளான். அந்தப் பரிதாப கிலையை நோ க்கித் தேவர் யாவரும் கலங்கி கொக்கனர்; அரம்பையர் மறுகி அழுதனர்; அவருடைய கண் கள் நீர் விண்ணிலிருந்து துளித்து விழுந்தன; பிரமதேவனும் சிவ பெருமானும் பெரிதும் மறுகினர். சக்தியம் கருணை முதலிய உத்தம நீர்மைகளும் உருகி யுளைந்தன. பகை இனத்தவரான பொல்லாத அரக்கரும் இவனது அல்லலைக்கண்டு ஐயோ! என்று அகம் இரங்கி நின்றனர்; பாவமும்கூடப் பரிந்து வருக்தியது. பகையும் பாவமும் கலுழ்ந்தது பரிவால். இராமனது துயர நிலையை கோக்கிப் பகைவரும் அழுதுள் ளனர்; பாவமும் கலுழ்ந்துள்ளது என இது மொழிந்துள்ளது. இது எவ்வளவு வியப்பு எத்துணை அதிசயம்! நேர்ந்த துயரத் துடிப்பையும், அதனை அடைய நேர்ந்துள்ளவனேயும் கவி இங்க னம் அதிவிநயமாய் விளக்கியுள்ளார். காவிய நாயகனது திவ் விய நீர்மைகளை எவ்வழியும் செவ்வையாகத் தெளித்தருளுகின் ருர். மொழிகளின்வழியேவிழுமியஉணர்வுகள் ஒளிவீசுகின்றன. தங்களைக் கருவறுக்க மூண்டு வந்துள்ளவன் இராமன். அவன் துன்பமடையக்கண்டால் பகையும், பாவமும் இன்பமா யப்க் சிரிக்கவேண்டும்; அவ்வாறு உவந்து சிரிக்காமல் அவை பரிந்து அழுதிருக்கின்றன. ஏன் அழுதன? எதை உணர்த்துகின்றன? தமக்கு நேர் விசோதியாயிருந்தாலும் அவன் பரிபூரண மான பரிசுத்தன் ஆதலால் அவனது நீர்மையும் நிலைமையும் அவற்றின் உள்ளங்களை உருக்கித் தம்மையறியாமலே அவை