பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4500 கம்பன் கலை நிலை னபயன்? உன்னை இழந்தபின் நான் உயிரோடு ஒருகணம் இருப் பினும் அது ஊழியும் அழியாக பெரிய பழியாம். சாகமூண்ட பொழுதே உயிர்போக வேண்டும், அவ்வாறு போகாமல் நீண்டு புலையாடி நிற்கின்றது. என் கிலே பழியும் துயரும் இழிவும் படிந்து பாழ்பட்டுள்ளது. இலங்கை ஆட்சியை விபீடணனுக்கு வழங்குவதாகப் பெரிய வெற்றிவிரன்போல் உலகம் அறிய உறு திகறினேன். அவ்வுரை பொய்த்தது. பொய்யை மறந்தும் பேசாமல் யாண்டும் மெய்யையே பேணி அதனைப் பாதுகாப்ப தற்காகத் தனது அரசு முழுவதையும் துறந்து மனைவி மக்களையும். பிரிந்து கொடிய பல துயரங்களையும் அடைந்து நெடிய சக்திய விரகனப் நிலைத்துகின்ற அந்த உத்தமன் பிறந்த குடி கான் பிறந்த தளுல் பழுதுபட நேர்ந்தது. பெற்றதாய் உற்றதம்பி உரியமனவி முதலிய அனைவருக்கும் என்னல் பெரிய துயரங்களே சேர்ந்தன. அந்தோ! நான் உயிர் வைத்திருக்கலாமா?’ என இன்னவாறு பன்னிப் புலம்பி உன்னியுளைந்து கம்பியை மீண்டும் கழுவி உயிர் உருகி அவசமாய் அயர்ந்து கிடந்தான். கம்பியின் சோகத்தால் இங்கம்பி அடைந்துள்ள துயரத் அடிப்புகள் உரையிடலரியன். நேர்ந்த துன்பம் நெஞ்சை ஈர்ந்துள்ளமையால் நிலைகுலைந்து தவித்துள்ளான். கண் என உயிர் எனக் கருதியிருந்த புண்ணியத் தம்பி பொன்றி முடிந்தான் எ ன்று இவ்வென்றிவீரன் வெருண்டு. மருண்டு புலம்பியிருப்பதில் வெவ்விய துயரங்கள் விரிந்து நின் றன. சோக வேகத்தால் சுடுமொழிகளும் வெளி வந்தன. வேள்விக்கு ஏ.கி வில்லும் இறுத்து ஓர் விடம் வாழ்விக்கும் என்று முன்னே வருவித்தேன். இது எவ்வளவு பரிதாபமான வார்த்தை! (FTäurು உள்ளமும் உயிரும் வெந்திருத்தலால் வென்றிவீரன் வாயிலிருந்து இந்தவாருன விபரீத உரைகள் வெளிவர நேர்ந்தன. சீதையை ஒர்விடம் என்று குறித்திருக்கிருன் அரிய இனிய அமுதம் என உரிமையோடு மருவியிருந்த தனது அருமை மனேவியை இவ்வாறு உரைத்தது அதிசய வியப்பாயுள்ளது. இங்கப் பெண்ணரசியின லேயே தனக்கு எண்ணரிய துன்பங்கள் விளைந்தன என்று எண் ணியிருக்கிருன். அந்த எண்ணம் பல நிகழ்வுகளை மருவி வந்தது.