பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4501 அரசு முடி துறந்து கானகம் நோக்கி இராமன் புறப்பட்ட பொழுது சானகியும் உடன் வருவதாகத் தொடர்ந்தாள். இக் கோமகன் தடுத்தான்: 'கல்லும் முள்ளும் நிறைந்த காட்டில் மெல்லிய நீ நடக்கமுடியாது. கொடிய மிருகங்களும் பொல் லாக அரக்கர்களும் சஞ்சரிக்கும் இடம் ஆதலால் அங்கே வர லாகாது. அரண்மனையிலேயே மாமிமார்களோடு சுகமாயிரு; வனவாசம் கழித்து நான் விரைவில் வந்து விடுவேன்; நீயும் கூட வங்கால் கொடிய அல்லலே நேரும்' என இன்னவாறு பல சொல்லியும் கேளாமல் சீதை தொடர்ந்துவந்தாள், அகளுல் கேடுகள் தொடர்ந்தன. பஞ்சவடியில் வந்து சீதையை இராவ னன் வஞ்சமாய்க் கவர்ந்து போனன், போகவே பழிகளும் துயர்களும் வேகமாய் வந்தன. பின்பு அரிதின் முயன்று படை களேத் திரட்டிக் கடல்கடந்து இலங்கை புகுந்து அடலமர்புரிந்து வருங்கால் கம்பி மாயமாய் மடிந்தான். அந்த மாய்வில் உள்ளம் உடைந்து உணர்வு குலைந்து உயிர் ஒய்ந்து துயர் கூர்ந்து புலம்பு கின்ருன் ஆதலால் இங்வனம் பேச நேர்ந்தான். அல்லலான பேச்சில் மானசமருமங்களும்மனவேதனைகளும் மருவியுள்ளன. தம்பி செத்தான் என்று பித்தேறிப் பிதற்றுவதில் கொண்ட பெண்டாட்டியையும் இத்திண்டோள் வீரன் கண்டபடி திட்ட மூண்டது ஈண்டுக் கருதியுணர நீண்டது. தன்னுடைய சொல் லேக் கேட்டுத் தனது மனைவி தன் வீட்டில் அன்று அமர்ந்திருக் தாள் ஆல்ை தனக்கு யாதொரு அல்லலும் நேர்ந்திராது; கம்பிக் கும் இந்த அழிவு வந்திராது என்று சிங்கை கொந்திருப்பது முக் துற அறிய வந்தது. உரிய தம்பிமேல் உள்ள பாசத்தால் பிரிய மான மனைவியையும்பிழைபடப்பேசி இவ்வீரன் ஏசியிருக்கிருன். எல்லைமீறிய துன்பம் நேர்ந்தபொழுது எந்த மனிதனும் உள்ளம் உடைந்து பேசாத பேச்சுகளைப் பேசிவிடுவான் என் பதை இந்த வீர வள்ளலுடைய வாய்மொழி ஈண்டு விளக்கி நிற்கின்றது. இளையவன் பிரிவில் மனேவியின் பிரியம் மறைந்து போயது. உரிமையுடையவள் மீது மிகுந்த வருத்தம் நேர்ந்த போது அந்தச் சனியன் என்று சொந்தம்பாராட்டி கிங்தையாக வைவதுபோல் ஓர்விடம் என்பதும் இங்கே கூறிட வந்தது.