பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4502 கம்பன் கலை நிலை ஆருத் துயரத்தால் அலமந்து நொந்து புலம்புகின்ருன் ஆதலால் அங் தப் புலப்பத்தில் உயிரின் துணைவியையும் அயலே உதறித் தள்ளி. ன்ை. உடன்பிறந்த துணைவன் இறந்துபோனன் என்ற துடிப்பி ஞல் தன்னையும் இகழ்ந்து தவித்துகின்ருன். இக்குல வீரனுடைய அனுதாப நிலை நெடிய பரிதாபமாய்க் கடிது நிமிர்ந்து நின்றது. பிறந்தாய் என்னைப் பின்பு தொடர்ந்தாய்! இறந்தாய் உன்னைக் கண்டும் இருந்தேன். தன்பால் உழுவலன்போடு கம்பி கழுவியிருக்கதையும், அவன்பால் யாதொரு அன்புமின்றிக் கொடிய நெஞ்சய்ைத் தான் வழுவி நிற்பதையும் இங்வனம் வரைந்து கூறி இங்கம்பி மறுகியிருக்கிருன். தன் உடலில் இடர் சிறிதும் நேராமல் உட னிருந்து உரிமையோடு தன்னைப் பாதுகாத்துவந்த தனது அரு மைத் கம்பி உயிர்நீங்கி இறந்துகிடப்பதை நேரே கண்டும் கெஞ் சம் உடைந்து உடனே சாகாமல் நெடுமரம்போல் நிற்கின்றே னே! என்று தன் நிலையைக் கடுமையாக வெறுத்து இக்கோம கன் கதறியிருத்தலே இதில் துணுகி நோக்கி நாம் நொந்து கவல் கின்ருேம். அரிய அன்புப் பாசம் உயிரைத் துன்புறுத்தியுள்ளது. பிரியாத பிரியம். 'இராமன் பின்பு பிறந்தானும் உளன்' என்னப் பிரியாமல் பின்தொடர்ந்து இப்பெருமானத் கழுவிகின்ற பெருமை இலக் குவன் ஒருவனுக்கே தனி உரிமையாய் இனிதமைந்துள்ளது. இந்த அருமைப்பேற்றைப் பரதன் எண்ணி எண்ணி எங்கியிருக் கிருன். சத்துருக்கன் கண்ணிர் சொரிந்து கருதி யுருகியுள்ளான். இராமன் தம்பி என்று வையகம் வாய்மலர்ந்து மொழிந்து வர அண்ணனைத் தொடர்ந்து சென்று கானகம் புகுந்து இலட்சு மணன் ஏவல்புரிந்து வருவதை வானகமும் வியந்து நோக்கி இளவல் என உழுவலன்போடு அவனைப் புகழ்ந்து வருகிறது. இராம கிைங்கரியமாகிய இலட்சுமியை யுடையவன் ஆதலால் இலட்சுமணன் எனப் பெற்ருேர் அவனுக்கு இட்டபெயர் பெரும் பொருள் உடையது என அரும்பொருள் ஆயும் அறிவு டையாரும் ஆர்வம்மீதார்ந்து புகழ்ந்துள்ளனர். இளையபெருமாள் எனப் பெருமகிமையோடு உலகம் பேசிவர உரிமை செய்து