பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4508 வந்த அருமைத்தம்பி ஆதலால் அவன் இறந்தான் என்றதும் இங்கும்பி எங்கித் தவித்துத் தன் இருப்பை வெறுத்து கெருப்பை மிதித்தவன்போல் கெடிது பதைத்து கெஞ்சம் துடித்தான். நான் இப்பொய்ப் பிறவிக்கும் பொறை அல்லேன். i பிறவித் துணையாய் அம்ைந்திருந்த நீ பிரிந்துபோனமையால் நான் இனிமேல் இங்கே உயிரைப் பொறுத்திருக்க முடியாது என்பதை இங்ஙனம் முடிவாக உரைத்தான். உற்ற துணை பிரிக் தது என்று தெரிந்தபோதே என் உயிர் பிரிந்திருக்கவேண்டும்; அங்ங்னம் பிரியாமல் நெடுந்துயரைச் சுமந்துகொண்டு பெருஞ் சுமையாயுள்ளதே! எனத் தன் உயிர்வாழ்வை வெறுத்து இவ் விரவள்ளல் உள்ளம்பதைத்திருப்பதை இவ்வுரை உணர்த்தியுள் ளது. தோன்றிய எதுவும் நிலையில்லாதது; மாயத் தோற்றங்க ளாய் மருவி நின்று மனக்கலக்கம் தருவது எனப் பிறவிநிலையை வெறுத்து உரைக்கின்ருன் ஆதலால் பொய்ப்பிறவி என்ருன். மெய்யான பிறவித் துணையாய் மேவி நின்றவன் ஆவி பிரிந்து போன்மையால் யாவும் பொய் என அவலித்துக் கூவி நின்ருன். தன் வாழ்க்கையில் அல்லல் அவலங்கள் நேர்க்கமையால் எல்லாம் வெறுப்பாய்த் தோன்றியன. மனவேதனை அறிவை வதைத்து மறுகச் செய்தது. பரிவுரைகள் பெருகி மறுகி வந்தன. வீடணனுக்கு ஓர் செல்வம் கிொடுத்தேன். ■ தன்னை அடைக்கலமாக வந்து அடைந்த விபீடணனுக்கு இராமன் ஆறுதல் கூறி அபயம் அருளி இலங்கையின் அரசுரி மையைத் தருவதாக உறுதிமொழி புகன்ருன் ஆதலால் அந்த வாக்கை நிறைவேற்றமுடியாமல் இடையே கடையாய் முடிவு றநேர்ந்ததே என்று நெடிது கவன்று நின்ருன். அங்கிலையை இவ் அரை உணர்த்தியுள்ளது. உள்ளக் கவலை உதவிமேல் நின்றது. தாழ்கடல் இலங்கைச் செல்வம் நின்னதே தந்தேன். (விபீடணன் அடைக்கலம் 142) முன்னம் இன்னவாறு தந்துள்ளான். தன் வாயால் சொன்ன இந்த வாய்மொழி பொய்யாப்ப்போக நேர்ந்ததே! ான்று வெப்துயிர்த்து நொந்தான். கம்பி இறந்துபோனமையால் தன்னுல் இனி யாதும் செய்யமுடியாது; தன் உயிரையும் மாய்த்