பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4504 கம்பன் கலை நிலை துஒழிந்துபோகவே வேண்டும் என்று துணிந்துள்ளமையால் தன் வாக்குப் பொய்த்ததே என்று நேர்ந்த பிழைபாட்டை கினைந்து நெஞ்சம் பதைத்து கெடிது துடித்தான். படித்தேன் பொய்ம்மை, குடிக்குப் பழிபெற்றேன். யாண்டும் பொப்கூருமல் எவ்வழியும் மெய்யே பேசிவந்த தனது அரசகுடி கன்னல் பழிபட நேர்ந்தது என இக்குலமகன் - குலை துடித்து கொந்துள்ளதை இவ்வுரை இங்கே குறித்துள்ளது. - சத்தியத்தையே பழகிவந்த உத்தம குலக்குரிசில் ஆகலால் தன் வாய்மொழிபொப்பட வந்ததே என்றுநோயுழந்துகின்ருன். மெய்யை விழைந்து பேணி வந்தவன் வெய்ய துயருழந்தான். பொப் பழியுடையது; அதனை மனிதன் பேசலாகாது; பேசின் பழி விளையும்; அவனுடைய குடியும் இழிவடைய நேரும் என்னும் உண்மை ஈண்டு நுண்மையா உணரவந்தது. எவனுடைய வாய் பொப்பேசாமல் உள்ளதோ அவனே மேலான குலமகன்; பொப்பேசுகின்றவன் கீழான இழிமகனே யாவன் என ஒர் கெளிபொருள் இதில் வெளியாய் கின்றது. இனிய இயல்புகளால் மனித இனம் உயர்த்துவருகிறது; ஈனப் புன்மைகளால் அது தாழ்ந்து விழுகிறது. எவன் இழிவுக்கு அஞ்சி விலகுகிருைேஅவன் உயர்வுக்கு நேரே உறுதியாய் எ ழுகின்ருன். பொய் குடிக்குப்பழி என்று இராமன் துடித்திருத்தலால் அவன் பிறந்த குடியும் இருந்தபடியும் தெரிந்துகொள்ளவந்தன. ஒழுக்கமும் வாய்மையும் காணும்.இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார். (குறள், 952) உயர்ந்த குடிப்பிறக்காது நிலைமையை உணர்ந்துகொள்ளத் தேவர் இங்ங்னம் உண்ர்த்தியிருக்கிரு.ர். இதில் வரைந்து வைத் துள்ள அளவு கருவிகளைக்கொண்டு "ஒருவன அளந்துபார்த்து மூன்று வகையிலும் தேறி கின்ருன் ஆல்ை அவனை உயர்ந்தவ கை உணர்ந்துகொள்க; மாறுபடின் இழிக்கவகை இகழ்ந்து விடுக. மனமும் மொழியும் மெய்யும் இங்கே இனமா எண்ன வந்தன. உள்ளத்தின் காணம் உலகத்தில் மேன்மை தருகிறது. கானம் எ ன்ருல் என்ன? அ.அது எப்படி யிருக்கும்?