பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4505 தீமை புரியக் கூசுத்ல் காணம் ஆம். பொப் பேச அஞ்சுதல் வாய்மை ஆம். பிறர்மனை கோயாது கிற்றல் ஒழுக்கம் ஆம். மனம் மொழி மெய்கள் இங்கனம் புனித நிலையில் மருவி கின்ருல் அந்த மனிதன் உயர்ந்த குலமகன் ஆப் ஒளிமிகுந்துள் ளான். நல்ல பழக்கங்களையே எவ்வழியும் பழகிப் பரம்பரையா கப் பண்பட்டு வந்துள்ள சிறந்த குடும்பத்தையே உயர்ந்தகுடி என்று தேவர் இங்கே வரைந்து குறித்துள்ளார். நன்மையான தன்மைகள் நன்கு அமைந்துவரின் அந்தக் குழுவை விழுமிய குடி என்று உலகம் விழைந்து புகழ்ந்து வரு கிறது. இனிய நீர்மை தோய்ந்தது கனிமகிமை வாய்ந்தது.

    • It is only noble to be good.” (Tennyson) நேன்மையா யிருப்பதே உயர்குல நிலையாம்' என டென்னி சன் என்னும் ஆங்கிலக் கவிஞர் இங்ங்னம் கூறியிருக்கிரு.ர்.

“To be noble, we will be good.” (Childe Harold) 'நாம் நல்லவராய் இருப்பதே பெருந்தன்மையாம்' ht ଶ୪T (Byron,) பைரன் என்பவர் இவ்வாறு குறித்திருக்கிரு.ர். இனிய கீர்மைகள் தோய்ந்து வருகிற இனம் மனித சமு காயத்தில் கன்கு மதிக்கப்படுதலால் அது தோன்றிய வழிமுறை உயர்குடி என ஆன்ற மேன்மையை அடைந்து கின்றது. Noble-man, Noble extraction என மேல்நாட்டாரும் உயர்குடிப் பிறப்பைக் குறித்து இங்க னம் கூறியிருக்கின்றனர். குண நீர்மைகள் உயர்ந்தபொழுது அந்தக் குடியில் பிறந்தவரை உலகம் புகழ்ந்து போற்றிவருகிறது. சத்திய சீலன் ஆகிய அரிச்சந்திரன் முதலாக உத்தம் அா சர்கள் பலர் தோன்றி ஒளிபுரிந்து வந்துள்ள விழுமிய குடி ஆக லால் தன்னல் அது பழி அடைய நேர்ந்ததே என்று அழி துயர் மிகுந்து இராமன் விழிநீர் சிந்தி வெந்து நொந்துள்ளான். பொய் என்பது இயல்பாக யாதும் தெரியாது கின்றது; அது இடையே வந்த படிய நேர்க்கது. ஆதலால் படித்தேன் பொய்யை என்ருன். அயலான இழிவு அவமே புகுந்தது. 564