பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4508 கம்பன் கலை நிலை செய்ய வல்லோம்? முழுமுதல் பரம! உனது பழைய நிலைமையை மறந்து எய்திய பிறவிக்கு ஏற்றபடி புதிய நிலைமையில் மதி மயங்கியதுபோல்புலம்பியுழலுகிறஇக்க அதிசய மாயையை அகற். றியருள்' என இன்னவாறு, தேவர்கள் வானவிதியில் நின்று ஞான நிலையில் ஒர்ந்து இராமனை நோக்கித் துதித்திருக்கின்ருர். ஞான நோக்கினல் நன்கு தெரிந்து வானவர் செய்துள்ள துதிமொழிகளால் இம்மான வீரனது நிலைமை தலைமை நீர்மை ர்ெம்ை முதலிய மகிமைகள் யாவும் உலகம்அறிய வெளி வந்துள் ளன. அவருடைய அறிவுரைகளில் அன்பு சுரந்து மிளிர்கின்றன. முன்பு பின்பு நடுவு இல்லாய்! ஆதியும் அங்கமும் இல்லாதவன்; அநாதி நித்தியன் என் பதை இது குறித்துள்ளது. காலம் இடம் முதலிய நிலைகளை எல் லாம் கடந்து என்றும் புதியனப் பாண்டும் நிலையாய் நின்று நிலவும் நின்மலன் என விண்ணவர் விழைந்து துதித்திருக்கிருர், 'மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத்தாய காலமும் கணக்கும் நீத்த காரணன்." (சுந்தரகாண்டம், பிணிவிட்டு, 80) என இராவணன் எதிரே இராமனேக் குறித்து அனுமான் இங்ங் னம் முன்பு கூறியுள்ளதும் இங்கே தேவர்கள் குறித்திருப்பதும் ஒருங்கே கூர்ந்து நோக்கி உண்மை நிலைகள் சிந்திக்க வுரியன. அருட்பெருஞ் சோதியான பரமபதியே மனித உருவில் இராமனப் ஈண்டு வந்து அரிய பெரிய காரியங்களை முடிக்க மூண்டு நிற்கின்றது; அந்த நிலையில் இடையே நேர்ந்த அவல நிலையில் கவலை தோய்ந்து மனித இயல்பின்படி மறுகி மயங்கிச் சகோதர வாஞ்சையால் உருகி உயங்கினன். இவனது உண்மை நிலையை ஒரளவு அறிந்தவர்கள் ஆகலால் அமரர்கள் ஒ ஆதி மூலப் பொருளே! எங்கள் தீது மூலம் தீர்க்கவந்த நீ ஏதோ ஒர் எளிய மனிதன்போல் விழிநீர் சிக்கி அழுது பதைத்து அவ சம் அடைந்துள்ளாயே! உனது மாயாகவசத்தை மாற்றியருள்!" என்று உள்ளம் கரைந்து உருகி மறுகிப் போற்றி நின்ருர். அரக்கர் குலத்தை வேர் அறுத்து அமரரைக் காக்கவக்க வன் ஆதலால் அதனைத் தலைமையாக வரைந்து கூறி நிலைமையை