பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4510 கம்பன் கலை நிலை வருவாய் போல வாராதாய்! இராமன் வந்துள்ள வரவைக் குறித்து இந்த வாசகம் விங் தையாக விளக்கியுள்ளது. தசரதன் மகனப் இங்கே பிறந்து வங் தாலும் திருமால் அங்கே பரமபத சாதனப் இருந்தருளுகின்றன் ஆதலால் அவனது வரவும் போக்கும் அதிசய விசித்திரங்களாம் என அமரர் மதிகலங்களோடு துதிசெய்து நின்றனர். - வந்தாய் போல வாராதரய்! வாராதாய்போல் வருவானே! செந்தா மரைக்கண் செங்கனிவாய் கர்ல்தோள்.அமுதே'எனதுஉயிரே சிந்தா மணிகள் பகர்.அல்லேப் பகல்செய் திருவேங் கடந்தானே! அந்தோ! அடியேன் உன்பாதம் அகலகில்லேன் இறையுமே.(1) வாரா வருவாய்! வருமென்மாயா மாயா மூர்த்தியாய் ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய் திரா வினேகள் தீர என்னே ஆண்டாய்! திருக்குடந்தை ஊரா! உனக் காட்பட்டும் அடியேன் இன்னும் உழல்வேனே? 2) (திருவாய்மொழி) திருமாலை நோக்கி ம்ேமாழ்வார் உருகிப் பாடியுள்ள இக் தப் பாசுரங்கள் இங்கே சிந்திக்கத் தக்கன. ஆழ்வார் வாய்மொ ழியில் நம் கவிஞர்பெருமான் ஆழமாய் ஈடுபட்டிருப்பதை இடை யிடையே கண்டு வருகிருேம். வருவாய்போல வாராதாய் என்ற வாக்கு எதை நோக்கி வந்துள்ளது? என்பதை ஈண்டு நுனித்து நோக்கவேண்டும். பழகிப் பயின்ற மொழிகள் விழுமிய வாசனை களாய்ப் பேசுகின்ற வழியில் கேசு மிகுந்து வெளிவந்துள்ளன. கருவாய் அளிக்கும் களைகண்ணே! அமரர் முதல் யாரும் அறிய முடியாக பரமபத நிலையிலிருந் தவன் கருவிலுருவாகி வந்து உலகவுயிர்களைக் காத்தருளுகின்ற கருணையாளன் என்பதை இது வார்த்துக் காட்டியுள்ளது. அபாய நிலையிலுள்ள சிவகோடிகளைக் காக்க உபாயமாய் உரு வெடுத்து வந்த பெருமான் என்பது ஈண்டு உணர வந்தது. களைகண் என்னும் சொல் துன்பங்களைக் களைந்து நீக்கி இனிது பாதுகாத்தருளும் ஆதரவாளன் என்னும் பொருளை யுடையது. அல்லலில் ஆக வாய் நல்லது செய்ய வந்தவன் என்க. களைகண்=ஆதரவு, புகலிடம், பற்றுக்கோடு.