பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 451.1 களைத்தவர்களுக்குக் கண்ணுய், இளைத்தவர்களுக்கு இனிய உறுதி நிலையமாய் உரிமையோடு மருவி வரும் பெருமான் என் பது தெரியவந்தது. துன்பம் களைந்து அருளும் இன்ப நிலையினன்" களவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன் வளைவாய் கேமிப் படையாய்! குடந்தைக் கிடந்த மாமாயா! தளரா உடலம் எனது ஆவி சரிந்துபோம் போது இளேயாது உனதாள் ஒருங்கப் பிடித்துப் போத இசைேேய! (திருவாய்மொழி) நீ எனது துன்பம் களைந்தாலும் களையாது ஒழிந்தாலும் உன்னத்தவிர வேறு களைகண் யாதும் எனக்கு இல்லை; நீயே என்றும் நிலையான தஞ்சம் என நெஞ்சம் கரைந்து பெருமாளே கினைந்து நம்மாழ்வார் உருகி யுரையாடியிருப்பதையும் அவரது உணர்வு நிலையையும் உறுதி உரிமையையும் அன்பின் பரவசத் தையும் இங்கே நாம் உணர்ந்து இன்புறுகின்ருேம். பிள்ளை அழுதால் காய் வந்து பால்கொடுப்பதுபோல் உள் ளம் உருகிச் சீவன் மறுகியபொழுது தேவன் ஆதரித்தருள்கின் முன். எல்லா உயிர்களுக்கும் இனிது ஆதரவு புரிந்தருளும் பெரு மானே யாதொரு ஆதரவும் இல்லாதவனப் அல்லலுழந்து இங்கே அவசமடைந்துள்ளான். அவனது அவசநிலை அதிசயமுடையது. எடுத்த மனிதப் பிறவிக்கு இயையத் தன்னை முழுதும், மறந்து இராமன் இன்னவாறு இன்னலுழந்து அயர்ந்து கிடத் கலை அமரர் உன்னி நோக்கி முதலில் உளைந்தாலும் பின்னர் உண்மை நிலையை ஒர்ந்துணர்ந்து உறுதி பூண்டு தெளிந்து பரம நீர்மையைப் பன்னித்துதித்தார். தொழுது புலம்பிய அவருடைய வழிபாடுகள் ஆதிமூல நிலைகளை நேரே துலக்கி வந்தன. திருவாழ் மார்ப நின்மாயை திருமோ? ஞான நோக்கோடு பேசிவந்த வானவர் முடிவில் இப்படி முடிவு செய்துள்ளனர். இலட்சுமி நாயகா! உனது அதிசய மாயை யாராலும் அறிய முடியாதது; நீயே கருணைபுரிந்து காட் சிகந்து எங்களைக் காத்தருள வேண்டும்; கருதி அருளுக' என இவ்வாறு ஆர்வம் மீதுணர்ந்து நீர்மையோடு போற்றி நின்ருர். சேர்ந்துள்ள நிலைமையை நினைந்து நெஞ்சம் கவன்று கொங் காலும் தேர்ந்த அறிவினர் ஆதலால் தேவர்கள் தெளிந்து மேல் ஆவதை ஆய்ந்து யாவரும் ஒருங்கே ஒர்ந்து கின்ருர்,