பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 4,518 புனேந்தனர். ஜெயம் ஜெயம் என்ற ரணபேரிகைகள் யாண்டும் நீண்டு முழங்கி விழாவின் நிலைமைகளை எங்கும் நன்கு விளக்கிக் கொண்டு திரிந்தன. ஊரடங்கலும் உள்ளக் களிப்பால் ஒளி மிகுந்து விளங்கியது. உவகைக் காட்சிகள் யாண்டும் ஓங்கின. களம் கரந்தது. அலங்கார ஆரவாரங்கள் ஊரில் நிறைந்துகொண்டிருந்த பொழுது இராவணன் தனியே ஒர் யோசனை செய்தான். போர்க் களத்தில் எதிரிகள் கையால் மாண்டு தன் இனத்தவரும் இறந்து கிடத்தலால் அந்த இழவு அவனுடைய மனத்தை உருத்தியது. அவ்வாருன அழிவு நிலையை அயலார் காண நேர்ந்தால் பெரிய இழிவாம் என்று கருதினன். தன் படையில் யாரும் சாகவில்லை; தனது சேனைகளே எதிரிகளை எளிதே கொன்று தொலைத்தன என்று நெடிய வென்றி நிலையை வெளியே காட்ட விருேடு மூண்டான். மருத்தன் என்னும் சேனைத்தலைவனை அழைத்தான். அமர்க்களத்தில் குவிந்து கிடக்கின்ற அரக்கர் உடல்களையெல் லாம் வாரி எடுத்துக் கடலில் விகி விடும்படி கடிது குறித்தான். அவ்வாறே அவன் விரைந்து செய்து முடித்தான். ஊருள் அலங் கார ஆரவாரங்கள் கடந்துகொண்டிருக்கும்பொழுதே போர்க் களத்தில் பொன்றிய அரக்கர் உடல்களை ஒன்றும் தெரியாமல் ஒழித்து வந்தான். அது பெரிய வென்றி நிலையாக் கருதநேர்ந்தது. அந்த நெறியை அவர்செய்ய அரக்கன் மருத்தன் தனக்கூவி முந்த கீபோய் அரக்கருடல் முழுதும் கடலில் முடுக்கிடுகின் சிங்தை ஒழியப் பிறர் அறியின் சிரமும் வரமும் சிந்துவன்என்று உந்த அவ்ன்போய்அரக்கர் உடல் முழுதும் கடலினுள்ளிட்டான். தன் சேனையில் இறந்து பட்டவர் நிலை வெளியே தெரியா திருக்கும்படி அரக்கர்பதி மறைத்திருக்கும் கள்ளத்தனத்தை இது காட்டியுள்ளது. பிணங்களை அகற்றி ஒழித்த இரகசியத்தை யாருக்கும் சொல்லக்கூடாது; சொன்னல் நீ செத்தாய் உன் உயிரை எடுத்து விடுவேன்' என்று மருத்தனே அச்சுறுத்தி விடுத் திருக்கின்ருன். போலி வெற்றியில் பொங்கி நின்றுள்ளான். நின்சிங்தை ஒழியப் பிறர் அறியின் சிரமும் வரமும் சிந்துவன். 5Ꮾ5"