பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4514 கம்பன் கலை நிலை என்று உறுதி கூறி உக்தி விடுத்திருக்கலால் அந்த வேலை முடிந்திருக்கும் விதத்தையும் முடித்தவனது திறத்தையும் நாம் கூர்ந்து ஒர்ந்து உணர்ந்துகொள்ளுகிருேம். கள்ளமும் கபடமும் விண் அபிமானமும் இங்கே விரவி நிற்கின்றன. எப்படியும் தன்னுடைய வெற்றி மேன்மையை வெளியே தெளிவாக நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று நிருகர்பதி கருதி முயன் றிருக்கின்ருன். அந்த முயற்சியும் உயர்ச்சியாய் முடிந்திருக்கி றது. அது முடிந்தவுடன் வேறு ஒன்றையும் முடிக்க நேர்ந்தான். சீதைக்குக் காட்டியது. பொருகளத்தில் கிருதர் உடல்களைத் துடைத்து ஒழித்தபின் எதிரிகளே எங்கும் பிணங்களாய்க் குவிந்து கிடந்தனர். இரா மன் செத்தான் என்பதைச் சீதை நேரே தெரிந்துகொண்டால் பின்பு உள்ளம் தேறித் தன் பக்கல் உறவாயிருக்கக் கூடும் என மடமையான பேராசையால் இராவணன் பித்தேறி நின்ருன் ஆதலால் அவளை விமானத்தில் ஏற்றிக்கொண்டுபோய்ப் போர்க் களத்தைக் காட்டும்படி தருண மங்கையர்க்கு வருண பேதம் தெரியாமல் மருமமாய் ஆணையிட்டான். மன்னன் ஆணைப்படி மாதரும் அவ்வாறே அதி விரைவாகச் செய்ய நேர்ந்தார். தெய்வ விமானக் கிடை ஏற்றி மனிதர்க்கு உற்ற செயல் எல்லாம் தையல் காணக் காட்டுமின்கள் கண்டால் அன்றித் தன் உள்ளத்து ஐயம் நீங்காள் என்றுரைக்க அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி உய்யும் உணர்வும் நீத்தாளே நெடும்போர்க் களத்தின்மிசை உய்த்தார். இராவணன் ஏவலின்படியே சீதையை விமானத்தில் ஏற்றி ஆகாயத்தில் நிறுத்திப் போர்க்களத்தைக் காட்டி அரக்கியர் புரிந்துள்ளதை இங்கே தெரிந்து கொள்கிருேம். தனது வெற்றி நிலையை அந்தப் பெண்ணரசி கண்ணுரக் கண்டு தெளியவேண் டும் என்று இந்தக் காமக் களியன் எண்ணிச் செய்திருப்பது இழி மடமையாய் மூண்டுள்ளது. பழிபடர்ந்த காமி அழிதுயரங் களை விழி தெரியாமல் விழைந்து களிமிகுந்து செய்தான். தனது உரிமைத் துணைவன் இறந்து போனன் என்று தெரிந்துகொண்டால் வேறு போக்கின்றிச் சானகி மனம் திரும் பித் தன்பால் அன்பாப் இசைந்து விடுவாள் என்று கடுகண்க யோடு இவன் கருதியிருக்கிருன். காமப்பித்து உள்ளக்கையும்