பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,516 கம்பன் கல்ை நிலை அடித்தாள் முலைமேல் வயிறலைத்தாள் அழுதாள் தொழுதாள் அனல் வீழ்ந்த கொடித்தான் என்ன மெய்சுருண்டாள் கொதித்தாள் பதைத்தாள் குலைவுற்ருள் துடித்தாள் மீன்போல் உயிர்காப்பச் சோர்ந்தாள் சுழன்ருள் துள்ளிள்ை குடித்தாள் துயரை உயிரோடும் குழைத்தாள் உழைத்தாள் குயிலன்னுள். (5) விழுந்தாள் புரண்டாள். உடல்முழுதும் வியர்த்தாள் உயிர்த்தாள் வெதும்பினுள் எழுந்தாள் இருந்தாள் மலர்க்கரத்தை நெரித்தாள் சிரித்தாள் ஏங்கினுள் கொழுந்தா! என்ருள் அயோத்தியர் தம் கோவே! என்ருள் எவ்வுலகும் தொழுந்தாள் அரசேயோ என்ருள் சோர்ந்தாள் அரற்றத் தொடங்கிள்ை. (6) (பிராட்டி களம்காண்படலம்) சீதை பட்டுள்ள பரிதாப நிலைகளை இந்தப்பாசுரங்கள் பரிந்து காட்டியுள்ளன. துயரத் துடிப்புகள் உயிர் வேதனைகளைத் துவக்இ கிற்கின்றன. விமானத்திலிருந்து போர்க்களத்தைக் கண்டபொ ழுது வேறு ஒன்றையும் காணவில்லை. இராமன் ஒருவனேயே கண்டாள். விரிந்து பரந்துள்ள சமர பூமியில் எழுபது வெள்ளம். சேனைகள் மடிந்து கிடக்கின்றன. பரிதாபமாய்ப் பாடழிக் கிடக்கின்ற அவற்றுள் யாதும் சானகி கண்ணுக்குத் தோன்ற வில்லை என்றது அவள் கண்ட நிலையும் கருத்தும் குறிப்பும் காணவந்தது. கம்புக் காட்சி அற்புத மாட்சி ஆயது. தனது கணவன் உருவையே எப்பொழுதும் கருதி உருகி யுள்ளவள். ஆதலால் அக் கோமகனயே ஆவலோடு காணநேர்க் தாள். உரிய பதியை அன்றி வேறு எதையும் காணுத, பாதும் அறியாக அதிசய பதிவிரதை என்பது ஈண்டு அறிய வந்தது. - கடவுளேக் கருதி யுருகி ஒருமை எய்தியுள்ள ஞான யோகி களைப்போல் சானகி தேவியும் தனது நாயகனேயே அல்லும் பக அம் அகவரகமும் எண்ணி யுருகி வந்தாள்; இங்கே கண்ணேத் திறந்து காண நேர்ந்தபோது அந்த வண்ணனேயே கண்டாள். எண்ணத்தில் உருவாகி நின்றது எதிரே அங்கு மருவிக் கிடந்தீது,