பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் A617 கணவன் உருவன்றி ஒன்றும் கண்ணுல் காணுதாள். அந்தப் பெண்ணரசி நிலையை உலகம் எண்ணி உணரும்படி இது காட்டியுள்ளது. இக்காட்சியால் அரிய பல மாட்சிகளை அறியலாகும். உத்தம பத்தினியின் உயர்ந்த நீர்மை ஊன்றி உணரும் தோறும் ஆன்ற மகிமையாய்த் தோன்றி வருகிறது. சண்ணிலும் கருத்திலும் இராமன் உருவையே சீதை எண்ணி இருக்தி வருகிருள்; அவ்வுண்மை ஈண்டு நுண்மையாக உணர வந்தது. மானச நிலை மகிமை தோய்ந்து நின்றது. அதிசய வீரனை தனது நாயகன் மண்ணில் மருவிக் கிடப் பதைக் கண்ணில் காணவே சானகி ஆவி பதறி அலமந்து துடித் தாள். நஞ்சைக் குடித்தவள்போல் நெஞ்சம் பதைத்தாள். நெடுந் துயரோடு நிலைகுலைந்து புலம்பினுள். இக்குலமகள் மறுகி அழவே உலக வுள்ளங்களும் உருகி அழுதன. இந்திராணி முக லாகத் தேவர் மங்கையர் யாவரும் ஆவலித்து அழுதனர். இலட் சுமி அழுதாள்; சரசுவதி அழுதாள்; பார்வதி தேவியும் பரிந்து அழுதாள்; கங்கருவ மங்கையர் கரைந்து அழுதார்; விஞ்சையர் மகளிர் வெய்துயிர்த்து அழுதார்; நாககன்னியர் ந்ைந்து அடு கார்; வானவர் மகளிரோடு தானவர் தையலரும் கவித்து அடு தார்; கங்காதேவி அழுதாள்; காள்காதேவி அழுதாள்; துர்க்கை முதலிய சக்திகள் அழுதனர்; சித்தர் மகளிரும் கேம்பி அழுதனர்; பூமி தேவியும் அழுதாள்; தரும தேவதையும் அழுதது; கரும தேவதைகளும் கலங்கி அழுதன; ன ன்றும் யாதும் இரங்காத அரக்கிமார்களும் அன்று இரங்கி அழுதனர்; கின்ருர் யாவரும் நின்ற கின்ற படியே கெடிது அழுதனர் என்ருல் அந்தக்கொடிய சோக நிலைகளை முடிவு கூறி (EGr முடிக்க வல்லவர் யாவர்? ஒருத்தி அழ உலகம் அழுத்தகுல் இவளது நிலைமையும் 唇六 மையும் கருத்தான்றிக் காணவந்தன. பெண்மைக் குலத்துக்கு உண்மையான மகிமைகள் இந்தப் புண்ணியவதியால் விளைக் _ள்ளன. ஆதலால் அந்த இனம் எல்லாம் உள்ளம் உருகி ஒருங் கே. அழ நேர்ந்தன. இனவுரிமைகள் மனமறுகி பழுதன. இராமன் வனம்புக சேர்ந்தான் என்றதை அறிந்தபோது உயிரினங்கள் எல்லாம் துயரினங்களாய் துடித்து அமுதன.