பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4518 கம்பன் கலை நிலை அந்த அழுகையோடு இந்த அழுகையையும் தழுவி நோக்கின் உழுவலன்புகளும் விழுமிய நிலைமைகளும் தெளிவுறலாகும். ஆவும் அழுத, அதன்கன்அஅழுத அன்று அலர்ந்த பூவும் அழுத, புனல்புள் அழுத கள் ஒழுகும் * காவும் அழுத களிறு அழுத கால் வயப் போர் - மாவும் அழுத அம் மன்னவனே மானவே. (1) கிள்ளேயொடு பூவை அழுத; கிளர்மாடத்து உள்ளுறையும் பூசை அழுத உருவு அறியாப் பிள்ளே அழுத, பெரியோரை என்சொல்ல? வள்ளல் வனம் புகுவான் என்றுரைத்த மாற்றத்தால். (2) நம் உள்ளம் உருகி விழிநீர் சொரியும்படி இந்த அழுகை கள் வெளிவந்துள்ளன. எந்த உள்ளந்தான் இவற்றைக் கண்டு உருகாமல் இருக்கும்? பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்து போயும், இன்றும் நேரில் நிகழ்வதுபோல் நெஞ்சை உருக்கிக் கண்ணி: ரைப் பெருக்கச் செய்கிறது. காரணம் கருதி யுணர வுரியது. எந்த மூர்த்தியின் பிரிவுக்காகப் பறவைகளும் விலங்கு களும் பரிந்து அழுதனவோ அந்த மூர்த்தி இறந்துபோனுன் என்று சொந்த மனைவி துடித்து அழுகின்ருள். அந்த அழுகையில் விண்ணுலகும் மண்ணுலகும் எண்ணுலகும் கண்ணிர் சொரிந்து உண்ணிர்மை புரிந்து பெண்ணிர்மையோடு கதறி அழுகின்றன. இருவர்பாலும் உயிரினங்கள் இவ்வாறு உருகியிருத்தலால் இவருடைய உண்மை நிலைகளை ஒர்ந்து உணர்ந்துகொள்ளுகின் ருேம். உறவுரிமைகளைப் புற அழுகைகள் தெளிவுறுத்தி நின்றன. சீவ கோடிகளுக்கெல்லாம் உயிராதாரமாயுள்ள தே வ தேவனே இராமனுய் வந்திருக்கிருன். அந்த அழகனுக்கு ஆவித் துணையான தேவியாய்ச் சீதை வந்திருக்கிருள். அந்தப் பரமபதி நீர்மைகள் மறைந்துபோய் மனித வுருவில் மருவி வரினும் அரிய பல இனிய நீர்மைகள் இருவரிடமும் பெருகியுள்ளன; ஆதலால் யாரும் எவ்வுயிரும் தம் உயிர்போல் உன்னி யுருகி அவர்பால் உழுவலன்புகள் பெருகி வருகின்றனர். அந்த வரவில் இந்தக் சோக அழுகைகள் இங்கே ஏகமாய் நீண்டு வேகமாயெழுங் தன. இருவரும் எவ்வுயிர்க்கும் இனியராயுள்ள செவ்வி தெரிய