பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4519 வந்தது. பெண் இனம் என்றும் எங்கும் பெரும் புகழ் உறும்படி பிறந்து வந்துள்ள பெண்ணரசி ஆதலால் இவள் கண்ணிர் சொரிந்து கதறி அழுதவுடனே பெண்குலம் முழுவதும் கன் குல நிலையில் மென்குலைகுலைந்து பெருந்துயர் மிகுந்துபேதுற்றழுதன. மங்கை அழலும் வாட்ைடு மயில்கள் அழுதார். இந்தப் பாட்டின் எடுப்பும் இசையும் கொடுப்பும் சுவை யும அதிசய நிலையில் துதிகொண்டு எழுந்துள்ளன. சோகரசம் கதம்பி வந்துள்ள இந்தக் கவி கவியின் சுவைகளை உணர்ந்து அகிக்கும் இரசனையாளர்களுக்கெல்லாம் அதிசய இன்பம் அரந்து எவர்க்கும் செவியின் சுவையாய்ச் சிறந்து திகழ்கின்றது. மங்கை என்று சீதையை இங்கே குறித்தது, பருவ உருவங் களில் சிறந்து விழுமிய பண்புகள் நிறைந்து எழில் சுரந்து விளங் கும் அவளது தனி இயல்பு தெரிய வந்தது. பேரழகுடைய இந்த அரசகுலமங்கை தனக்கு கேர் அழகனை இராமன மருவி மகிழ்ந்து இன்ப நலங்களை இனிது திளைக்க வுரியவள்; அந்த அரிய சுக போகங்களை அடியோடு இழந்து கொடிய துயரங் களே அடைய நேர்ந்தாளே! என்று நெடிய பரிதாபம் சீவர்களு டைய நெஞ்சை உருக்கியுள்ளமையால் தேவமங்கையர் யாவ ரும் ஐயோ! என்று மறுகி உருகி ஆவலித்து அழுதனர். வயது முதிர்க்க ஒரு கிழவி அழுதால் இவ்வளவு பரிதாபம் கொன்ருது ஆதலால் மங்கை என்று இங்கனம் வரைந்து குறித் தார். பெயரை விளக்கிக் கூருமல் பெண்மைப் பருவத்தைக் கவி 華 முட்டிச் சொல்லியிருப்பது சுவையின் கட்டியாய்ச் சுரந்து திகழ் வின்றது. பெரிய சோகத்திலும் அரிய விவேகத்தை விளக்கிய ருள்கின்ருர். உணர்வின்சுவை உரைகள்தோறும் ஒளிபுரிகின்றது. கம் காவிய நாயகியைச் சீவிய ஓவியமா நம் கவிஞர்பிரான் கொழுது துதித்து வருவது விழுமிய பண்பாப் விளங்கி வருகி |றது. கேவ கேவிகளும் இவளுக்கு இரங்கி அழுதனர் என்றது இவளது உயர்வையும் கற்பின் இயல்பையும் உணர்த்தி நின்றது. மழவிடையோன் பங்கின் உறையும் குயில் அழுதாள். உமாதேவி அழுதுள்ளதை இவ்வாறு உரைத்திருக்கிரு.ர். என்றும் இளமையான அழகிய காளையை வாகனமாக்