பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4521 சீதை பெரிய புண்ணியவதி. பாவ நிலைகள் எவ்வழியும் ஒழியும்படி விழுமிய நிலையில் ஒழுகி வருகிருள். பாவங்களும் அவற்றை மருவியுள்ள பாவிகளும் அடியோடு ஒழிய வேண்டும் ான்றே கணவனேடு சேர்ந்து விழியூன்றி வேலைசெய்து வரு ன்ெமுள் ஆதலால் இந்தப் பதிவிரதைக்குப் பாவம் முழுவிரோதி. அப்படியிருந்தும் அந்தப் பாவமும் சீதைக்குப் பரிந்து அழுதது ான்றது இப் பெண்ணரசியின் பெருமகிமை எண்ணி உணர வர்கது. உலக அனுபவங்களைக் கடந்து உணர்வுகள் ஓங்கின. ஒருவனுக்கு இன்பம் நேர்ந்தால் அவனுடைய பகைவர் _ள்ளம் வருந்துவர்; துன்பம் வந்தால் அவர் உவந்து நகுவர்; இங்கே பகைமை வகையில் உள்ள பாவம் சீதை அழுகதைக் கண்டு மகிழ்ந்து சிரித்திருக்கவேண்டும்; அவ்வாறு சிரியாமல் வருக்தி அழு திருக்கிறது. இவ்வாறு அது இங்கே */(Լք:55 ஏன்? இந்த அழுகை அதிசய நிலையை விழி த்ெரிய விளக்கி யுள்ளது. புண்ணியத்தின் நிலையமான அந்தப் புனிதவதி எவ்வுயிரும் ாவ்வுலகும் எண்ணியுருகும் இயல்பினள் என்பது நுண்ணி ாக உணர வந்தது. கண் என எவையும் கருத வுரியவள். கல்லும் கரைந்து உருக மண்ணும் மறுகி -ՔվԱՔ அஞ்சன வண்ணனே நோக்கி நெஞ்சம் பதைத்து நிலைகுலைந்து அழுத இப் பெண்ணரசி துயரம் தாங்கமாட்டாமல் எங்கி அலமந்து உயிர்ப் பொடுங்கி மூர்ச்சையர்யிள்ை. ஆகவே அருகே நின்ற மடங்தை பர் விரைந்து குளிர்ந்த நீரை முகத்தில் தெளித்துத் தேற்றினர். தேறிவிழித்தவள் மாறி விழுந்து மறுகிப்புரண்டு உருகித்துடித்து உருண்டு அழுதாள். பெண்ணரசி செயல் பெரிய துயரமாயது. கண்ணேக் கையால் மோதினுள். முகத்தில் அடித்துச் சானகி அழுது பதைத்திருக்கும் யை இது விழிதெரிய விளக்கியுள்ளது. அழகிய கரிய பெரிய _ண்கள் அழுது சிவந்ததோடு அறைகளும் பட்டன. கயலைக் கமலத்தால் அலைப்பாள் எனக் கண்ணைக் கையால் மாதினுள் என்றது அடித்த கைகளையும் அடிபட்ட கண்களை பும் துணித்துக் காண வந்தது. கமலம்=தாமரை மலர். கயல்= கெண்டைமீன். செந்தாமரை மலர்போன்ற சிவந்த மெல்லிய 566