பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4522 கம்பன் கலை நிலை கைகளால் சீதை கண்களில் அறைந்திருக்கிருள். கயல் தண்ணி ரில் உகளுதல்போல் விழி கண்ணிரில் மிதந்திருக்கிறது. கயலும் கமலமும் ஓரினமா நீரில் நிலைத்திருப்பன ஆதலால் நீர்மை நிறைந்த கண்ணுக்கும் கைக்கும் அவை நேரினமா நேர்ந்தன. அதிசய அழகனை இராமனைத் தனியுரிமையாக் கண்டு களித்தற்குரிய கண்கள் அன்று கடுந்துயருழந்தன. எந்த மூர்த் தியை வீரக்கோலத்தோடு நேரே காணவேண்டும் என்று வேணவாவோடு சீதை கெடிது விழைந்திருந்தாளோ அந்த வீரன் மண்ணில் விழுந்து கிடந்தான் ஆதலால் இனி இந்தக் கண்கள் இருக்கவேண்டுமா? என்று பெண்கள் நாயகம் பேதுற்று அடித்தாள். தான் கண்பெற்ற பயன் தன் கணவனைக் கண்டு மகிழவே, அந்தக் கட்டழகன் பட்டழிந்தான் என்று காணவே சானகி கண்ணை மோதி அறைந்து உயிரைக் கோதி *. எறிந்துவிட விரைந்து மூண்டாள். வெய்து துடித்தாள்; துயரப் பதைப்புகள் சொல்ல முடியாத அல்லல்களாய் எல்லை கடந்து கின்றன. ஆவி அலமந்து மயங்கித் தேவி கலங்கிளுள். உயிரேபோய்ப் பரதவிக்கும் உடலேபோல், மத்தால் உள் உடைந்து அலம்பும், தயிரேபோல், தவித்துத் துடித்து உயிர்த்துப் பதைத்துக் கொதித்துப் புலம்பினுள். பெண்ணரசி அமுது புலம் பியதில் அவளது விழுமிய மேன்மைகளும், உழுவலன்புகளும் வீரப் பான்மைகளும், கரும நீதிகளும், கரும சாரங்களும் மருமங்களாய் வெளி வரலாயின. சில அயலே வருகின்றன. சீதை புலம்பியது. உறமேவிய காதல் உனக்குடையார் புறம்ஏதும் இலாரொடு பூணகிலாய் மறமே புரிவார் வசம் ஆயினயோ? அறமே கொடியாய் இதுவோ அருள்தான்? (1) முதியார்உணர் வேதம் மொழிந்தவலால் கதிஏதும் இலார்துயர் காணுதியோ? மதியேன் மதியேன் உனேவாய்மையில்ை விதியே! கொடியாய் விளையாடுதியோ? @ கொடியேன் இவை காணகிலேன் உயிர்கோள் முடியா கமனே முறையோ முறையோ?