பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4524 கிம்பன் கலை நில உள்ளம் உடைந்து சீதை உருகி மறுகி அழுதுள்ள இப்பகுதியில் வாழ்வின் மனவேதனைகள் பல தெரிய வந்துள்ளன. பழைய நிகழ்வுகள் பலவற்றையும் நினைந்து நெஞ்சம் நொந்திருக்கிருள். நேர்ந்துள்ள கேடுகளுக்கெல்லாம் தானே மூலகாரணம் என்று சாலவும் தவித்துள்ளமையை உரைகள் உணர்த்தி நிற்கின்றன. தான் பாவியா யிருந்தாலும் புண்ணிய சீலனை இராமனுக்கு இந்த அழிகேடு வரலாமா? என்று விதியினை வெறுத்து வைதிருக் கிருள். கருமமும் தலைகாக்கவில்லைய்ே என்று தளர்ந்து இகழ்ந் துள்ளாள். ஓ தரும தேவதையே! உனது நெறி முறைகளையே பேணி யாண்டும் நீதியோடு ஒழுகி வந்த விழுமிய சக்கரவர்த் தித் திருமகனுக்கு உதவி புரியாமல் பழிகாரரான அரக்கர்க ளுக்கு வசமாய் நின்று வசைபுரிந்துள்ளாயே இது எவ்வளவு கொடுமை எத்துணை மடமை புண்ணியர்கள் இனிமேல் இவ் வுலகில் இருக்கலாமா? வேதவிதியின்படியே ஒழுகி வந்த நீதி மான் இவ்வாறு தீது அடையும்படி செய்துள்ளாயே; ஆ விதியே! உனது அநீதியான தீமை மிகவும் கொடியது. தருமன். என மருவியுள்ள எமனே துயரத் தீயில் வெந்து தவிக்கின்ற என் உயிரை நீ கொண்டுபோக மாட்டாயா? நான் இலங்கைச். சிறையிலிருந்து தவம் கிடந்தது இந்த முடிவைக் காணவா? ஐயோ! அயோத்தியர் வேங்கே மிதிலையில் வந்து என்ன மணந்துகொண்ட பின் என்ன பலன்களைக் கண்டாய் கொடிய பாவியாகிய என்னல் நீ செடிய துன்பங்களையே அடைந்தாய்! அமரரும் துதிசெய்து தொழுகின்ற அதிசய வீரா என் விதி செய்த சதியால் உன்கதி இவ்வாருயது; தீய பாதகியாகிய என்னை வையம் வையும்; கோசலைத் தெய்வம் இனிமேல் உயிர் வைத்திராது; கைகேசி அம்மாள் கருத்து நிறைவேறியது; பொய் யும் புலையும் பேசிக் கூனி செய்த கொடுமையால் எனது மு மன்னன் முடிதுறந்து கான் அடைந்தாலும் வானும் வையமும் வணங்கி வர மகிமையோடு கின்ருன். நான் தொடர்ந்து ஒரு மான விழைந்து மறுகி வேண்டினேன்; பாவியின் வேண்டுகோ ளுக்கு இசைந்து என் ஆண்டவன் அந்தத் தீய மாய மானே! தொடர்ந்தான்; தீமைகள் யாவும் தொடர்ந்து அடர்ந்து வந்தன, மடமையால் நான் கட்டி மூட்டிய தீமை அயோத்தியின் அரச குலத்தை வெட்டி வீழ்த்தியது; அமுதின் சுவை என இராமசா