பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இராமன் 4525 மியை எனக்குத் தனி உரிமையாத் தந்த அந்த மாமிக்கும் ஒரு எமனுய் நேர்ந்தேன்; இந்தப் பூமிக்கும் கொடிய புலேக்கேடு களை விளைத்தேன். என் பிறப்பும் இருப்பும் பெரும்பிழையுடை யன; சிறிய மாமி கூறிய அரிய மொழியின்படியே இளைய பெரு மாள் முன்னதாக உயிர் துறந்தான்; நான் பன்னிப் பன்னிப் புலம்பி இன்னமும் உயிர் வைத்திருக்கிறேன். பிராண நாயகன் பிராணன் நீங்கினன் என்று தெரிந்தும் எனது பிராணன் நீங்கா மல் உடல்ை ஒட்டி கிற்பது ஊனமான ஈனமேயாம், வள்ளல் மடிந்தான் என்று கண்டபோதே உள்ளம் உடைந்து உயிர் ஒழிந்து போயிருக்க வேண்டும்; அங்ங்னம் போகாத புலை உயி ரைப் போக்கித் தொலைக்கின்றேன்” என்று ஊக்கி எழுந்தாள். அயலே பரிந்து கின்ற திரிசடை விரைந்து பிடித்து நிறுத்தினுள். விளைவுகளை விளக்கி உளவுகளைத் துலக்கி உறுதி கூறினுள். சீதை பரிதாபமாய் அழுது புலம்பியதில் உழுவலன்புகளும் விழுமிய பண்புகளும் குடும்ப பாசங்களும் வெளிவந்துள்ளன. மண்னேர் உயிரே! இமையோர் வலியே! கண்ணே அமுதே கருணு கரனே! தன் கணவனே எண்ணி ஏங்கிச் சீதை இவ்வண்ணம் புலம் பியிருக்கிருள். அருமை மொழிகள் உரிமையான உழுவலன்பின் ஒளிகளாய் மிளிர்கின்றன. சொல் அளவில் சுவைத்து மகிழ் கின்ருேம்; பொருளை விரித்துப் பூரணமா விளக்கவேண்டாமலே காரணங்கள் எளிதே தெளிவாக் கனிந்து இனிது திகழ்கின்றன. தன் உயிர்க்கு இனிய நாயகனே மண்னேர் உயிர் என்றது எண்ணி யுண்ா வுரியது. சீவகோடிகளுக்கு யாண்டும் இதம் செய்பவன்; எவர்க்கும் உயிர்போல் இனியவன் என்னும் அரிய நீர்மைகள் தெரிய வந்தன. இராமன் மனித உருவில் மருவியிருக் தாலும் அமரர்கள் இனிது வாழ ஆதரவு புரியும் அதிசய விரன் ஆதலால் இமையோர் வலியே! என அமைவுடன் மொழிந்தாள். இமையவர் தமருடன் இனிது வாழவே தமதுபொன் மணிமுடி துறந்து தம்பியும் அமுதெனும் மனைவியும் அருகு பின்வரக் கமையொடு கான்புகு கருணை வாழியே!