பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4526 கம்பன் கலை நிலை என்று உலகம் உவந்து புகழக் கானகம் நோக்கி நடந்து போனவன் ஆதலால் வானகம் உய்ய வந்தவன் என இராமன் உயர்ந்து விளங்கினன். அவனுடைய சீர்மை நீர்மைகளை நேரி லிருந்து நன்கு கண்டு மகிழ்ந்தவள் இங்கனம் கருதி உருகினள். கண்ணே அமுதே' என்றது அருமையும் இனிமையும் எண்ணி எழுந்தன. தன் கண்ணினும் அரியவன்; உயிரினும் இனி யவன்; அமுதின் சுவையினும் ஆனந்தம் கருபவன் என இரா மனச் சானகி கருதி மகிழ்ந்துள்ளமை இவ்வுரைகளில் உணர வக்கது. தனது இனிய குண கணங்களால் உலக வுயிர்களை உவ கையில் ஆழ்த்தியுள்ளவன் ஆதலால் இப்புனித மூர்த்தியை மனித சமுதாயம் என்றும் இனிது போற்றி வருகின்றது. கொங்குமலி கருங்குழலாள் கெளசலைதன் குலமதலாய்! தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா! தாசரதி! கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்துஎன் கருமணியே! எங்கள்குலத்து இன்னமுதே! இராகவனே! தாலேலோ (1) தாமரைமேல் அயனவனேப் படைத்தவனே! தயாதன்தன் மாமதலாய் மைதிலிதன் மணவாளா வண்டினங்கள் காமரங்கள் இசைபாடும் கணபுரத்துஎன் கருமணியே! ஏமருவும் சிலேவலவா இராகவனே! தாலேலோ, (பெருமாள் திருமொழி) இராமனைச் செல்லப் பிள்ளையாகப் பாராட்டிக் குலசேகர மன் னன் உள்ளம் உருகி இவ்வாறு தாலாட்டியிருக்கிரு.ர். எங்கள் குலத்து இன்னமுதே' என்று அம்மன்னன் மனம் மகிழ்ந்து துதித்திருப்பது பத்திப் பரவசத்தை வெளிப்படுத்தி யுள்ளது. தமக்கு இன்னமுதம் என எவரும் எண்ணி மகிழும் இரா மனத் தனக்குத் தனி உரிமையான இனிய அமுதம் என்று சீதை கருதியுருகி யுள்ளாள். தன்னை ஒர்விடம் என இன்ன லோடு முன்னம் சொன்ன மளுளனை அமுதே கண்னேகருணை நிலையமே என்று இப்பெண்ணரசி இங்கே எண்ணி ஏங்கி இனத்திருக்கிருள். உரிய நாயகனுடைய அரிய பண்புகளும் பெரிய அன்புகளும் உள்ளத்தை உருக்கி யிருக்கின்றன. -

  • இந்நூல் பக்கம் 4500, வரி 23 பார்க்க.