பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4527 உய்யாள் உயர் கோசலே. தனது அருமை மாமியை நினைந்து மருமகள் இவ்வாறு மறுகியிருக்கிருள். மகன் இங்கே மடிந்தான் என்று தெரிந்தால் மாமி அங்கே இறந்துபோவாள் எனச் சீதை வருந்தி யுருகியி ருப்பது அறிந்துகொள்ள வந்தது. அந்தத் தாயினுடைய அன்பு ரிமைகளையும், பண்பு நிலைகளையும் நன்கு தெரிந்தவள் ஆதலால் உயர் கோசலை எனப் புகழ்ந்து பேசினுள். உள்ளத்தில் உறைக் துள்ள பிரியமும் மதிப்பும் மரியாதையும் உரையில் வெளியாயின. கொடுங்கைகேசி கருத்து இதுவோ? சிறிய மாமியை இவ்வாறு இகழ்ந்து கூறியுள்ளாள். அரச செல்வத்தைப் பறித்துக்கொண்டு தனது அருமை நாயகனைக் காட்டுக்கு ஒட்டிய கொடியவள் ஆகலால் கொடும் கைகேசி என்ருள். இப்படி முடிந்து படும் என்று கருதியோ அன்று அப்படி முடுக்கிவிட்டாள்? அவளுடைய கருத்து நிறை வேறியது; உள்ளம் களித்திருக்கட்டும் என்று மனவேதனை யோடு பழித்துரைத்தாள். உற்ற துயரம் உயிரை வதைத்திருத்த லால் உரைகள் கடுமையாய்க் கறுத்து வெறுத்து வந்தன. கடல் கடந்த இலங்கையில் தனது நாயகன் அடலழிந்து விழ்ந்திருத்தலால் அயோத்தியை நினைந்து வருந்தினுள். கண் காணுத சீமையில் யாதொரு நாதியும் இல்லாமல் பெண்கள் ாயகம் பெருந்துயருழந்து பேதுற்றுப் புலம்பியிருப்பது உலக வுள்ளங்களை எங்கும் உருக்கி யிருக்கிறது. பலவும் பரிந்து புலம்பி பவள் பின்பு இலக்குவனே எண்ணிக் கலக்கம் மிக அடைந்தாள். கொழுந்தா என்று உள்ளம் உடைந்து கூவியிருக்கலால் அக்க இளவல்மீது கொண்டுள்ள பேரன்பு நேரே தெரிய வந்தது. தன்ன உரிமையோடு காத்து நின்ற அருமை வீரனைச் சிறுமை சில கூறி அயலே போக்கிய செயலை நினைந்து கினைந்து வருக்தி வந்துள்ளாள். செய்த பிழையைத் தெளிந்து சிங்கை உளைந்தாள். D INTLD புனிதனை தனது அருமைக் கொழுந்தனை இகழ்ந்து பேசிய அந்தப் பாவத்தாலேயே கான் கொடிய சிறையை அடைந்து நெடிய துயரங்களை அனுபவிக்க நேர்ந்தது என்று