பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#530 கம்பன் கலை நிலை தேடிய தவமே அன்ன திரிசடை. என வரிசையோடு வரைந்து குறித்தது அவளுடைய உதவி శజు களையும் உறுதி நலங்களையும் உணர்ந்து கொள்ள வந்தது. ஒரு மனிதனுக்கு நேர்கின்ற அல்லல்களை நீக்கி நல்ல இன்பங்களே. நல்கவல்லது தவமே ஆதலால் அந்த நிலைமையில் நேர்ந்துள்ளவளை இந்த அருமையான உவமையால் விளக்கி இங்ங்னம் உரைத்தார். தவம் நெடுநாளாகத் தான் செய்த தவமே ஒரு பெண் உருவமாய் மருவிக் கண் எதிர்ே தோன்றித் தன்னக் காத்ததுபோல் திரி சடை அதுபொழுது சீதையைக் காப்பாற்றியிருக்கிருள். அந்தக் காப்பு நிலையின் உயர்வையும் உறுதியையும் உவமை நயமாக் காட்டி நின்றது. ஒப்புமைக் காட்சி உய்த்துனா வுற்றது. - தவம் அரிய பெரிய மகிமை யுடையது. அதனைச் செய்து கொண்ட தவசி கருதிய எதையும் எளிதே அடைந்துகொள்கின் முன். பரமபதமும் அவனுக்கு உரிமையாயுளது. வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும். (குறள், 265) தான் விரும்பிய நலன்களையெல்லாம் விரும்பிய படியே தவத்தால் ஒருவன் அடையலாம் ஆதலால் அந்த அரிய தவத்தை மனிதன் உரிமையோடு செய்துகொள்ள வேண்டும் எ னக் தேவர் இவ்வாறு உறுதி நலனை அறிவுறுத்தியிருக்கிரு.ர். நஞ்சு குடித்தாலும் நவை யின் அறு தவம் கின்ருல் அஞ்சி ஒளித்தாலும் அரண் இல்லை தவம் உலந்தால், குஞ்சரத்தின் கோட்டிடையும் உய்வர் தவம் மிக்கார் - அஞ்சலிலர் என்றும் அறனே களே கண் என்பார். - .." - (சீவகசிந்தாமணி, 2557) சஞ்சு குடித்தாலும் தவம் ஒருவன உய்யச் செய்யும்; அது இல்லையானல் வேறு எவ்வளவு பாதுகாப்புகள் அமைந்திருக்கா லும் அவன் உய்ந்துபோக முடியாது என தவத்தின் மகிமையை உடன்பாடு எதிர்மறை என்னும் இருவகை நிலைகளிலும் வைத்து உறுதியோடு தெளிவும் இது நன்கு விளக்கி யுள்ளது.