பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4360 கம்பன் கலை நிலை இந்திரசித்து ஏவிய காகபாசம் இருக்க இடமும் தடம்தெரி யாமல் அடியோடு நீங்கி மறைந்தது என்பதை இவ்வாறு உவ மைகூறி விளக்கியருளினர். இவ்விளக்கம் உரிமையில் விளைந்தது. திருவெண்ணெய் கல்லூர் என்னும் பதியில் சடையப்ப பிள்ளை என்னும் பெரிய கொடைவள்ளல் இருந்தார். கல்வியா ளரைப் பல்வகையிலும் உரிமையோடு பரிந்து பேணி வந்தார். அவரை அணுகிய புலவர்களுடைய பசி நீங்கியதுபோல் நாக பாசம் நீங்கி ஒழிக்கது என ஈங்குப் பாங்கு கனிந்து தெளிய, வந்தது. உள்ளம் கனிந்த உதவி நிலையில் இது உதயமாயுள்ளது. நம் கவிஞர் பெருமானை அவ்வள்ளல் பேரன்போடு பேணி வந்தார் ஆதலால் அந்த நன்றியறிவால் இந்தவாறு அவரை له به கம் அறியப் புகழ்ந்து கூறினர். இராமகாவியத்துள் ஆங்காங்கே சடையப்ப வள்ளலுடைய புகழ் ஒளிவீசி உவகை விளைத்து வரு வதை உணர்ந்து கவியின் உள்ளத்தைத் தெளிந்து வருகிருேம். "மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்று என்று விட்டளவும் பால்சொரியும் வெண்ணேயே-காட்டில் அடையா நெடுங்கதவும் அஞ்சல் என்ற சொல்லும் உடையான் சடையப்பன் ஊர்.” (கம்பர்) சடையப்பரைக் குறித்து இன்னவாறு சில தனிப்பாடல் களும் இவர் பாடியிருக்கிருர். வந்த எவர்க்கும் உவந்து அன்ன மிட்டு விருந்து புரிந்து அவர் பேணி வந்துள்ள பெருந்தகைமை வியந்து பேசவந்தது.அடையா நெடுங்கதவும்,அஞ்சல் என்ற சொல் லும் உடையான் என்ற கல்ை அவரது உபகார நீர்மை உண லாகும். ஆருயிர்களுக்குப் பேருபகாரியாய் அவர் இருந்துளார். பசி உயிர்களை வருத்தி வகைப்பதுபோல் பாசம் இலக்கு வன் முதலியோரை மயக்கி மடித்திருந்தது; அப்பசியைச் சை யன் நீக்கியருளியதுபோல் இப்பாசத்தைக் கருடன் நீக்கியரு ளினன். இருவருடைய தகைமைகள் ஒருமையா யுணர வந்தன அவன் சிறந்த அறிஞர்களே ஆதரித்தான். இவன் உயர்க்க வீரர்களை வாழ்வித்தான். அவனைக் கண்டவர் துயரம் நீங்கி உவகை அடைந்தனர். இவனேக் கண்டவர் அபாயம் நீங்கி ஆனந்தம் அடைந்தனர்