பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4531 தவம் அல்லல்களை நீக்கி எல்லா நிலைகளிலும், மனிதனே மேன்மைப் படுத்தும் ஆதலால் அதனை உரிமையாச் செய்து கொள்பவன் அதிசய மகானுய்த் துதிசெய்யப் பெறுகின்ருன். மனித வாழ்வில் வேதனைகளும் சோதனைகளும் நிறைந்துள் ளன; தவத்தைச் சாக்னையாச் செய்து கொண்டவன் அவற்றை எளிதே கடந்து இன்பம் மிகப்பெறுகின்ருன். கருமமும் தவ மும் தம்மைப் பேணி வருபவரை யாண்டும் பேணி அருளுகின் றன. அவற்றைக்காணியாகமனிதன் கருதிக்கொள்ளவேண்டும். When the scourge Inexorable, and the torturing hour Calls us to penance. (Paradise Lost) "துன்பங்களும் துயரங்களும் அதிகமான பொழுது உய்தி யை நாடி நாம் தவத்தை நோக்கிக் கவிக்கின்ருேம்” என்னும் இது இங்கே உணர்ந்து கொள்ள வுரியது. மில்ட்டன் எ ன்னும் ஆங்கிலக் கவிஞர் இங்ங்னம் பாடியிருக்கிரு.ர். தவம் அல்லலை நீக்கியருளும் என்பதை எந்நாட்டவரும் எண்ணியுள்ள உண்மை ஈண்டு எதிரறிய வந்தது. நல்லதை யாரும் நயந்து கொள்கிருர், சோகத் துடிப்பைக் குறித்துக் கூறி வருங்கால் தவத்தின் சிறப்பையும் வியப்புறக் கவி உணர்த்தி யிருக்கிரு.ர். மனித சமு காயம் தவ நலமுடையதாய் உயர் நிலை அடைய வேண்டும் என்னும் குறிப்பு அவர் உள்ளத்தில் உறைந்துள்ளதை உரை களின் வழியா நாம் கூர்ந்து ஒர்ந்து உணர்ந்து கொள்ளுகிருேம். தான் தேடி ஈட்டி வைக்கதவம் ஒடி வந்து உதவி புரிந்தது போல் திரிசடை சமையத்தில் விரைந்து சீதைக்கு ஆதரவாப் ஆறுதல் புரிந்தாள் என்ற கல்ை அவளது தன்மையும் தகவும் நன்மையும் இகமும் இங்கே நன்கு தெரிய வந்தன. - உரைத்த உரைகள். மறுகி மயங்கிய சீதையை அருகணைத்து மிருதுவாய் அவள் கூறிய உறுதி மொழிகள் உணர்வு நலங்கள் சுரந்து வந்தன: 1.அம்மா! தோ! நீ யாதும் வருக்காதே; உனக்கு யாதொரு துேம் வராது; விதி சிறிது இடையே விளையாடிக் கொண்டிருக் கிறது; கொடியவரது முடிவு கடிது நெருங்கியுள்ள்து; அந்த