பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4532 கம்பன் கலை நிலை முடிவு காணுமுன் சில துயரங்களை நடுவே காண நேர்ந்துள் ளாய்; மாயமான ஏவி இலங்கை வேந்தன் முதலில் வஞ்சித் தான்; பின்பு உன் தந்தை போல் ஒருவனே நேரே கொண்டு வந்து காட்டி உன்னைத் துடிக்கச் செய்தான்; நாக பாசத்தால், பகைவர் நாசம் ஆயினர் என வேக வெற்றிகளை விரித்து விளக் கினன்; அவையாவும் மாயப் பொய்களாய் மறைந்து போயின; நேரே அனுபவத்தால் நீயும் பார்த்திருக்கிருய்;. நான் முன்னம் கண்டு சொன்ன கனவுகள் தவருகா! உனது கற்பும் தவமும் அற்புத நிலையில் அரண் செய்து வருகின்றன; நடுவே சில சோதனைகள் நிகழ்கின்றன; அவை வேதனைகளாய் விரிகின்றன; விரியினும் பரிதி எதிரே பனிப் படலங்கள் போல் விரைவில் ஒழிந்து போம்; பாவிகள் அழிந்து ஒழிவர்; புண்ணிய சீலர்கள் உயர்ந்து விளங்குவர்; தரும குண சீலனை உனது அருமை நாயகன் கிருதர் குலத்தை கிருமூலமாக்கி நெடிய புகழோடு நிலவி வருவதை உலகம் முழுவதும் உவந்து நோக்கி வியந்து வருகிறது; அத்தகைய அதிசய வீரன் இறந்து போனுன் என்று 母 வருத்துவது பெண்மையின் பேதைமையே; உண்மையா அவன் இறந்திருந்தால் அண்ட கோளங்கள் யாவும் அழிந்திருக் கும்; கடல்கள் வற்றி மலைகள் நொறுங்கிக் கதிரும் மதியும். கருத்து மடிந்து அமரர் அழிந்து பிரமன் ஒழிந்து யாவும் நாச மாய்ப் போயிருக்கும்; அவ்வாறு போகாமல் நிலைத்திருப்பதனல் உன் கணவன் சாகாமல் இருக்கிருன் என்பதற்கு அவை சாட்சிகளாயுள்ளன. அவனுடைய மாட்சிகளும் மகிமைகளும் அளவிடலரியன; தேவர் யாவரும் சிரம் மீது கைகூப்பிச் சிவன் திருமால் அயன் என்னும் அங்க மூவரைக் கண்டதுபோல் இந்த இருவரையும் கண்டு வணங்கிப் பொருவரும் அன்போடு போற் றித் துதிக்கின்றனர்; மனித உருவில் மருவியுள்ள பரமன் என்றே உன் நாயகனைக் கருதுக்தோறும் என் உள்ளம் உருகி வருகிறது; ே மணந்து கொண்ட மணுளன் என்று நெருங்கிப் பழகி வர் துள்ளமையால் எளிதே நினைந்து பெண்மை நிலையில் பேதுற்று அழுகின்ருய், உண்மை நிலையை உணர்ந்து உள்ளம் தேறியிரு; உன் நாயகன் இறந்து போயிருந்தால் உன்னை இந்த விமானம் தாங்கியிராது; இது அதிசயமான தெய்வீக விமானம்; மங்கலம் இழந்த விதவைகள் இதில் தங்கியிருக்க முடியாது; கீழே தள்ளி -