பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4535 கூவல் = கிணறு. வேலை= கடல். பெரிய கடலைச் சிறிய ஒரு கிணறு விழுங்கி விடுமோ? என்று பயந்தால் அது எவ்வளவு பேதைமையோ அவ்வளவு மடமையாம் இராமனே அரக்கர் வென்று விடுவார் என்று அஞ் சுவது என நெஞ்சம் தெளிய இங்ங்னம் கேரே மொழிக்காள். 'கூவத்தின் சிறுபுனலைக் கடல் அயிர்த்தது ஒவ்வாதோ கொற்ற வேந்தே' என அனுமான் முன்பு * இராமனிடம் கூறிய அதே உவமையைத் திரிசடை இங்கே சீதையிடம் கூறி யிருக்கிருள். இதய ஒளிகள் ஒரு முகமா உதயமாயுள்ளன. தன்பால் அடைக்கலம் புக வந்த விபீடணனைச் சேர்க்கலா மா? சேர்த்தால் அவனுல் ஏதேனும் அபாயம் நேருமா? என்று வானாக் தலைவர்களிடம் இராமன் ஆலோசனை செய்த போது மாருதி இவ்வாறு அதி விநயமாக இனிய உவமையை எடுத்துக் கூறி உறுதி நிலையை அனைவரும் தெளிய உணர்த்தின்ை. அந்த மதிமொழி இங்கும் மருவி வந்துள்ளது. இராமன் கடல், அரக்கர் திரள் கிணற்று நீர். பல்லாயிரம் கிணறுகளையும் கடல் எளிதே அடக்கிக் கொள்ளும்; அதுபோல் பல கோடி அரக்கர் திரள்களையும் இராமன் எளிதே அழித்து வெற்றி கொள்வன் என்பது இந்த உவமையால் உய்த்துணர வந்தது. ஒப்புநிலை உயர்வு காட்டியது. கடல் என்ற கல்ை இராமன் அளவிடலரிய அதிசய நிலையி னன், அரிய பல அடலாண்மைகளை யுடையவன்; உலகம் கல முற உதவி புரிந்து வருபவன் என்பதும் தெரிய நின்றது. இங்ங்னம் நிலைமை தலைமைகளைக் குறித்து உணர்த்தி வந்த திரிசடைஇறுதியில் ஒர் அரிய மருமத்தையும் இனிது விளக்கினள். மங்கலம் நீங்கினரை ஆர் உயிர் வாங்கினரை கங்கை1 இக் கடவுள் மானம் தாங்கா. பிராட்டி உறுதியாய் உள்ளம் தேறியிருக்குமாறு விமானத் தின் நீர்மையை இவ்வாறு சீர்மையோடு தெளிவுபடுத்தினுள். சீதையை ஏற்றி வந்த புட்பக விமானம் அற்புக மகிமை

  • இந் நூல் பக்கம் 3614, வரி 24 பார்க்க.