பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,536 கம்பன் கலை நிலை வாய்ந்தது; பிரமதேவனல் குபேரனுக்கு அருமை வெகுமதியாக் கொடுக்கப்பட்டது; பேரழகுடையது; எவ்வளவு பேர்கள். ஏறி லுைம் விரிந்து இடம் கொடுப்பது; கதிவேகம் மிகுந்தது; நிதி பதிக்கு அதிசய வாகனமாய் அமைந்திருந்தது; அந்தத் திவ்விய விமானத்தைத் திக்குவிசய காலத்தில் இராவணன் வலிந்து கவர்ந்து கொண்டு வந்தான். அதிசயமான ஒரு தெய்வத் திரு வாக அதனைப் பேணி யிருந்தான்: கன்னத் தவிர வேறு யாரும். அதில் ஏஅறுவதில்லை; அதனையே தனது பிரியமும் பெருமிதமும் தோன்றச் சீதைக்கு உதவினன்; அதில் ஏற்றிக் கொண்டுவந்தே இந் நங்கைக்கு மங்கையர் போர்க்களத்தைக் காட்டினர்; அந்த விமானத்தின் அதிசய மருமக்கைத் திரிசடை தெளிவுறுத்தினுள். 'மங்கலம் நீங்கிய விதவைகளை இது தாங்கி நில்லாது; உன்னை உரிமையுடன் தாங்கி நிற்றலால் உனது அருமை நாயகன் இறக்க வில்லை; உயிரோடு இருக்கிருன் என்பதை இது நன்கு விளக்கியுள்ளது; சங்கையின்றி கம்பு; சாந்தமாயிரு; ஏந்தல் விரைந்து எழுந்து வந்துவிடுவார்'என்று மொழிந்து தேற்றினுள். நங்கை என்று சீதையை இங்கே விளித்தது பெண்கள் காயகமே உனக்கு யாதொரு பிழையும் நேராது; உன் தகுதிக்கு ஏற்ற தலைமையான நம்பியின் நிலைமையை நீ விரைவில் அறிந்து மகிழ்வாய் என்று பரிந்து வாழ்த்திய படியாம். திரிசடை உணர்த்திய உறுதி நிலைகளை உணர்ந்து உள்ளம் தேறிய சீதை கண்ணிர் வெள்ளம் மாறி அவளைக் கருத்தோடு நோக்கினுள்; தன் இருப்பின் அளவைக் குறிப்பாக உரைத்தாள். சீதை குறித்தது. அன்னே நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது ஆதலானே உன்னேயே தெய்வமாக் கொண்டு இத்தனே காலம் உய்ந்தேன் இன்னம் இவ் இரவு முற்றும் இருக்கின்றேன்; இறத்தல் என்பால் முன்னமே முடிந்த தன்றே என்றனள் முளரி த்ேதாள். (1) காண்னலாம் துறந்தேன் இல்லின் நன்மையின் நல்லார்க்குஏய்ந்த பூண் எலாம் துறந்தேன் என்றன் பொருசிலே மேகம் தன்னேக் காணலாம் என்னும் ஆசை கடுக்கஎன் ஆவி காத்தேன் ஏணிலா உடலின் நீங்கல் எளிது எனக்கெனவும் சொன்னுள். (2) சிறிது மனம் தேறிய சீதை திரிசடையை நோக்கி இவ்வாறு